💫cckkalviseithikal💫 🪑தேர்தல் பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும் என்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவிப்பு

💫cckkalviseithikal💫
🪑தேர்தல் பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும் என்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவிப்பு.


CCK Election 



🧾கோயம்புத்தூர் மாவட்ட கல்வி அலுவலரின் ( இடைநிலை ) அறிவிப்பு👇

தேர்தல் பணி விலக்கு


cckkalviseithikal

🧲அனைவருக்கும் வணக்கம், அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. 

🖇️தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறும் பொருட்டு 


📑உரிய ஆவணங்களுடன் 17.03.2026 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு உதவியாளரிடம் நேரில் தவறாமல் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

❌தவறும் பட்சத்தில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற இயலாது என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

⭐1. மாற்றுத் திறனாளிகள் (FULLY BLIND 70% ABOVE ONLY)


⭐2. மகப்பேறு விடுப்பு (விடுப்பு அனுமதி ஆணை நகல் தலைமை ஆசிரியர் மூலம்)


⭐3.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (டயாலிசிஸ்)


⭐4.புற்றுநோய்


⭐5.கன்னியாஸ்திரிகள்


⭐6. 31.03.2026 இல் பணி ஓய்வு பெற உள்ளோர்


💥மேற்காண் பிரிவில் தேர்தல் படிவத்துடன் நேரில் சம்பந்தப்பட்டவர்களே அலுவலகத்திற்கு  வரவேண்டும்.   

(ஒம்)/-தி.கோமதி,

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)

கோயம்புத்தூர்-641 001.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாற்றுத்திறனாளிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments