💫cckkalviseithikal💫 💥2026-27ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடத்துதல் குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவு

💫cckkalviseithikal💫
💥2026-27ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடத்துதல் குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவு.

Click here


CCK Director Proceedings


தனியார் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவு விவரம் 👇


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ໙ 12 (1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2025 2026 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, பார்வை (5) - இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி RTE Act 2009 பிரிவு 12 (1) (சி) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

cckkalviseithikal

பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, 2026 2027 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


1. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.


2. RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2025 2026 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25% ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 6.4.2026 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7..4.2026 அன்று 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 15.4.2026 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்.

3. சட்டப்பிரிவு 12 (1) (சி) இல் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in. στό ω 20.04.2026 5 18.05.2026 வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


4. 20.4.2026 முதல் 18.05.2026 வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் /வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்காண் அலுவலகங்களில் இணைய வசதி. கணினி. சான்றுகளை பதிவேற்றம் செய்ய தேவையான Scanner வசதி, கணினி இயக்குபவர் ஆகியவற்றை 19.04.2026 அன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5. அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு (அரசாணை (நிலை) எண். 60 பள்ளிக் கல்வித் துறை நாள் 01.04.2013 இல் உள்ள ஒப்புகைச் சீட்டில் ) உடன் தவறாது வழங்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி/வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் பெற்று இணைய வழியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



cckkalviseithikal

6. மாணவர்கள் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் ( Main Gate பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயர் பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் 6° x 10 அடி அளவில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்டது போல் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை (Flex Board) அவசியம் வைக்கப்பட வேண்டும்.

7. RTE 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்படும் பள்ளிகள் முறையாக அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.


8. தமிழ்நாடு பள்ளிகள் ( கட்டண வசூல் ஒழுங்குமுறை ) சட்டம் 2009 ன்படி தனியார் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயக்கப்படும் கட்டணத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

9. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஐ நடைமுறைப்படுத்துதல் சார்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பார்வை(2)ல் காணும் அரசாணையின்படி மாவட்டத் தொடர்பு அலுவலர் என்பதால், மேற்படி அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செய்து முடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும், பதிவேற்றம் செய்த சேர்க்கைக்கான விண்ணப்பங்களில் கீழ்க்காணும் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் அலுவலர்கள் தவறுகள் ஏதுமின்றி கவனமுடன் செயல்பட வேண்டும்.


Post a Comment

0 Comments