முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக பணிநாடுநர்களுக்கு EMIS இணைய தளம் வாயிலாக பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் சார்ந்து ஏற்கெனவே பார்வை (2)ன்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பெறப்பட்ட பணி நாடுநர்களின் வீட்டு முகவரி அடிப்படையிலேயே அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக பட்டியல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
7.22026 சனிக்கிழமை அன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல் ஆகிய 6 பாடங்களுக்கும், 9.2.2026 திங்கட்கிழமை அன்று நாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை 1 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 அரசியல் அறிவியல் ஆகிய 8 பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் (SSLC, HSC, Bachelors degree, Bed, Masters degree)
cckkalviseithikal
. Community certificate, PSTM certificate if applicable, Differently abled persons certificate if applicable சான்றுகள் முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
பணி நியமன ஆணை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. அதனால் பணிநியமன ஆணையினை ஐந்து நகல் எடுத்து Folder-ல் வைத்து வரிசையாக அடுக்கி பட்டியலுடன் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அறையில் 11.02.2026 அன்று காலை தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வு நடத்துதல் மற்றும் பணிநாடுநர்கள் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது சார்ந்து அனைத்து ஆயத்தப் பணிகளையும் இன்று 3.2.2026 அன்றைய Video conference மூலம் பள்ளிக்கல்வி இயக்குநர். மற்றும் இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) மூலம் அறிவுறுத்தப்பட்டவாறு மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


0 Comments