💫cckkalviseithikal💫
📌சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்தத் தொகையினை உயர்த்தி அரசாணை வெளியீடு.
- 📍ஓய்வூதியம் -
- சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள்
- சத்துணவு மற்றும்
- அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்தத் தொகையினை உயர்த்துதல் - சிறப்பு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகை வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
நிதி (மை.ம.ஆ.பி) துறை
அரசாணை (நிலை) எண்.41
13.02.2026
திருவள்ளுவர் ஆண்டு 2057
🔶படிக்கப்பட்டவை :
1. அரசாணை(நிலை) எண்.314, நிதி (ஊ.பி) துறை, நாள்.25.10.2017.
2. அரசாணை(நிலை) எண்.348, நிதி (ஊ.பி) துறை, நாள்.28.11.2017.
3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள்.24.01.2026.
4. சமூக நல இயக்குநரின் கடித எண்கள்.2020854/ச.உதி-1(2)/2025. 256945/-1(2)/2025, 14090/2-1(2)/2021, 265897/2-1(2)/2025, .30.01.2026.
5. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை. இயக்குநர் (ம) குழும இயக்குநரின் ந.க.எண்கள்.0307/இ 3-2/2026, 0262/இ 3-2 /2026, 263/63-2/2026, . 30.01.2026.
6. முதன்மை தலைமை வனப் பாதுகாவலரின் στ.ττ 2/1046/2026, 04.02.2026. கடிதம்
🎯ஆணை:
Click here
🌀பார்வை ஒன்று மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளில், அலுவலர் குழு 2017 இன் பரிந்துரையின் அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், வனக் களப்பணியாளர்கள். அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
📔2) பார்வை மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அறிவிப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகை உயர்த்தி வழங்கிடவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கிற்கான செலவினம் வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
💥3) மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க. பார்வை நான்கு முதல் ஆறு வரை படிக்கப்பட்ட கடிதங்களில், துறைத் தலைவர்கள் உரிய கருத்துருக்களை அரசிற்கு சமர்ப்பித்துள்ளனர்.
- 💥4) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திட
- சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம்,
- ஒட்டுமொத்த தொகையினை உயர்த்தியும்,
- அப்பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகை கீழ்கண்டவாறு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
![]() |
| CCK அட்டவணை |
🌟மேலே அட்டவணை வரிசை எண்.1 முதல் 3 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு ஓய்வூதியம் பெறுவோர் உயிரிழக்க நேரிட்டால், இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வழங்கப்படும்.
cckkalviseithikal
🌟5) உயர்த்தப்பட்ட சிறப்பு ஓய்வூதியம். ஒட்டுமொத்தத் தொகை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை அந்தந்த துறையின் உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் அனுமதிக்கப்படும். இதற்கான கூடுதல் செலவினம் அந்தந்தத் துறைகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்.
// ஆளுநரின் ஆணைப்படி //

0 Comments