💫cckkalviseithikal💫
ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியைகள், கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை.!!
📢அரசுப் பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் சக ஆசிரியைகள், கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் .
![]() |
| CCK News |
🎯தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2012 முதல் கணித பட்டதாரி ஆசிரியராக கோகிலபாண்டியன் இருந்தார்.
📌அதே பள்ளியின் ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் கோகில பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்தனர்.
🔶சத்துணவு அமைப்பாளர் நந்தினி என்பவர் பெயரில் காமன்கல்லுார் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தேனி டி.இ.ஒ.. மொக்கத்துரை ஆகியோர் போலியான பாலியல் குற்றச்சாட்டு புகார் மனு தயார் செய்து முன்னறிவிப்பு இன்றி ஆசிரியர் கோகிலபாண்டியனை சஸ்பெண்ட் செய்தனர்.
🔶இதையடுத்து கோகிலபாண்டியன் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
🎯நீதி மன்ற உத்தரவின் படி விசாகா கமிட்டி விசாரித்தது. அதில் முன் விரோதம் காரணமாக ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் சத்துணவு அமைப்பாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து பொய் குற்றச்சாட்டு சுமத்தியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
💥தொடர்ந்து கோகிலபாண்டியனுக்கு சஸ்பெண்ட் காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க தேனி டி.இ.ஓ., (தொடக்கக்கல்வி உத்தர விட்டார்.
🔶ஆசிரியர் கோகிலபாண்டியன் தன் மீது பொய்யான பாலியல் குற்றச் சாட்டு தெரிவித்த வனிதா. ராமலட்சுமி, ரவிச்சந்திரன், டி.இ.ஓ., மொக்கத்துரை உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார்.
🎯இவ்வழக்கில்
- டி.இ.ஒ., மொக்கத்துரை,
- ஆசிரியைகள் வனிதா,
- ராமலட்சுமிக்கு
- தலா மூன்றரை ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவர் பாசில் முகமது தீர்ப் பளித்தார்
- 🔗மேலும் மற்றொரு
- டி.இ.ஓ., கணேஷ் என்பவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம்,
- டி.இ.ஒ.. நேர் முக உதவியாளர் முனியாண்டி,
- பி.இ.ஒ.,க்கள் ஸ்ரீதேவி,
- ஹெலன் மெட்டில்டா ஆகிய மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

0 Comments