💫cckkalviseithikal💫 பணி சான்றிதழ் வழங்க இத்தனை ஆவணங்களா! குழப்பும் அதிகாரிகள்; அதிருப்தியில் ஆசிரியர்கள்!

💫cckkalviseithikal💫

பணி சான்றிதழ் வழங்க இத்தனை ஆவணங்களா? குழப்பும் அதிகாரிகள்; அதிருப்தியில் ஆசிரியர்கள்!


CCK News 


 
💥பணி சான்றிதழ் வழங்க. ஏற்கனவே பணிப்பதிவேட்டில்  பராமரிக்கப்படும். ஆவணங்களின் நகல்களை, மீண்டும் இணைத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


💯கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை கையாளும் அனைவரும், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

📌பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.


🚀இதனால், அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணி புரிவோருக்கு சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சமீபத்தில் வெளியிட்டது. 
இதற்கு ஆன்லைனில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்க, ஏப்ரல் 10 கடைசி நாளாகும்.

📝இதற்கான விண்ணப்பித்தில், பணிசான்றிதழ் சமர்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. 


⭐இப்படிவம், டி.ஆர்.பி.. இணையதளத்தில் உள்ளது. இதை பூர்த்தி செய்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் கையொப்பத்துடன். சான்றிதழை பதிவேற்ற வேண்டும்.

  • 📝இச்சான்றிதழில் 
  • ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள்,
  • கல்வித்தகுதி,
  • தற்போது பணி புரியும் பதவி, 
  • பள்ளி சார்ந்த விபரங்கள்
  • இதுவரை படித்த படிப்புகளின் சான்றிதழ் இடம்பெற்றுள்ளன. இத்தகவல்கள் ஏற்கனவே, ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ளது.

 📌இப்பதிவேடு, வட்டார கல்வி அலுவலகம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் வசம் பராமரிக்கப்படுகிறது. 

⚡மேலும்,
ஆசிரியர்களுக்கான 'எமிஸ்' இணையதளத்திலும் உள்ளது. இதே ஆவணங்களை நகலெடுத்து, பணிசான்றிதழ் கடிதத்துடன் இணைத்து அனுப்புமாறு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோவை நிர்வாகி சந்திரகுமார் கூறுகையில்

📝"பணிப்பதிவேடு மற்றும் 'எமிஸ்' போர்டலில், ஆசிரியர்களின் அனைத்து விவரங்களுக்கான அசல் சான்றிதழ்கள் உள்ளன. இதைப் பார்வையிட்டு பணிசான்றிதழ் வழங்கலாம். 

📄ஒவ்வொரு ஆசிரியரும், 30-50 பக்கம் நகல் எடுத்து சமர்பிக்க வேண்டியுள்ளது. 

📑ஒரு சான்றிதழ் வழங்க, பல ஆவணங்களின் நகல்களைக் கேட்பது. ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவோருக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தும்," என்றார்.

Post a Comment

0 Comments