💫cckkalviseithikal
🪄தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
🪄பள்ளிக் கல்வி இயக்கக ஆளுகைக்குட்பட்ட பள்ளிக் கல்வி இயக்ககம் / முதன்மைக்கல்வி அலுவலகம் / மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை) / அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகள் பொறுத்த அளவில் பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 5 இன்படி கீழ்க்காணுமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 இன்கீழ் பின்வருமாறு பொதுத்தகவல் அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் உள்ளனர்.
![]() |
| CCK School RTI |
🚀பள்ளிக்கல்வி இயக்ககத்தில்
- பொதுத்தகவல் அலுவலர்
- உதவி இயக்குநர் (சுற்றுச்சூழல்)
- உதவி பொதுத்தகவல் அலுவலர்
- சார்ந்த பிரிவு கண்காணிப்பாளர்
📌மேல்முறையீட்டு அலுவலர்
துணை இயக்குநர் (மின்ஆளுமை)
🚀ஒவ்வொரு முதன்மைக்கல்வி அலுவலகத்திலும்
📎பொதுத்தகவல் அலுவலர்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
📌உதவி பொதுத்தகவல் அலுவலர்
சார்ந்த பிரிவு கண்காணிப்பாளர்
📌மேல்முறையீட்டு அலுவலர்
மாவட்ட முதன்மைக் அலுவலர். கல்வி
cckkalviseithikal
🚀ஒவ்வொரு மாவட்டக்கல்வி (இடைநிலை) அலுவலகத்திலும்
⚡பொதுத்தகவல்அலுவலர்
மாவட்டக்கல்விஅலுவலர் (இடைநிலை)
⚡உதவி பொதுத்தகவல் அலுவலர்
சார்ந்த பிரிவு கண்காணிப்பாளர்
⭐மேல்முறையீட்டு அலுவலர்
மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்.
🚀ஒவ்வொரு மாவட்டக்கல்வி (தனியார் பள்ளிகள்) அலுவலகத்திலும்
⚡பொதுத்தகவல் அலுவலர்
மாவட்டக்கல்விஅலுவலர் (தனியார் பள்ளிகள்)
⚡உதவி பொதுத்தகவல் அலுவலர்
சார்ந்த பிரிவு கண்காணிப்பாளர்
📌மேல்முறையீட்டு அலுவலர்
மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்.
cckkalviseithikal
🚀ஒவ்வொரு அரசு மேல்நிலை / அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும்
📌பொதுத்தகவல் அலுவலர்
தலைமை ஆசிரியர் (மேல்நிலை /உயர்நிலைப் பள்ளி)
⚡மேல்முறையீட்டு அலுவலர்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
🚀ஒவ்வொரு அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளிலும்
✨பொதுத்தகவல் அலுவலர்
பள்ளித் தலைமை ஆசிரியர்
✨மேல்முறையீட்டு அலுவலர்
பள்ளிச் செயலர் / நிர்வாகி / தாளாளர்.
இப்பொருள் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் அரசு அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காணும் விவரங்களை அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும் எனவும், நிதியுதவி பெறும் பள்ளிகள் சார்பான தகவல்கள் நிதியுதவி பெறும் பள்ளிகளிலேயே முதலில் வழங்கப்படும் என அறிவிப்பு/ விளம்பரம் செய்யப்பட வேண்டும் எனவும், மாவட்டக்கல்வி அலுவலருக்கு தெரிவித்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேரடியாக உதவிபெறும் பள்ளிகள் சார்ந்த விண்ணப்பம் இயக்ககத்தில் பெறப்படின் அவை பரிசீலிக்கப்பட சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மூலமாக பள்ளிகளுக்கே திருப்பியனுப்பப்படும் என்ற தகவலும் பள்ளியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
cckkalviseithikal
நிர்வாகி அனைத்து பள்ளிகளின் தலைமைஆசிரியர் ஆகியோரிடமிருந்து இச்செயல்முறைகள் பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலைப் பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் இத்தகவல் வழங்கப்பட்டு, ஒப்புகை பெறப்பட்டுள்ளது எனும் சான்றினை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
பார்வை 2இல் குறிப்பிட்ட வழக்கு 09.01.2026 அன்று விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுசமயம் ஒரு மனுதாரர் தனது பிரிவு 6(1)இன்கீழ் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரிவு 4(1)(b) இன்படி அரசு அலுவலகங்கள் தங்களைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அத்தனை முக்கியத் தகவல்களையும் பட்டியலிட்டு மக்கள் கேட்காமலேயே அளிப்பதை உறுதி செய்வதே இந்த பிரிவின் நோக்கமாகும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களிடம் கீழ்க்கண்ட விதிமுறைகளை வலியுறுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
⭐1. பிரிவு 6(1) இன்கீழ் கோரப்படும் தகவல்கள் 30 நாட்களுக்குள் பொதுத்தகவல் அலுவலர் காலதாமதமின்றி அளித்திட வேண்டும்.
⭐2. தங்கள் மனுக்கள் அல்லாது பிற துறைகள் சார்ந்த மனுக்கள் எனில் 5 நாட்களுக்குள் பிரிவு 6(3)இன்படி சார்ந்த துறைக்கு அனுப்பிடவும். அவ்விவரத்தை சார்ந்த மனுதாரருக்கு தகவல் வழங்கிடவும் வேண்டும்
⭐3. தங்கள் அலுவலக மேல்முறையீட்டு அலுவலர் பற்றிய விவரத்தை பொதுத்தகவல் வழங்கும் கடிதத்தில் தெரிவித்திட வேண்டும்.
பொதுத் தகவல் அலுவலர் துறை சார்ந்த தகவல்களை தானாக முன்வந்து அதாவது மக்கள் கேட்காமலேயே தங்கள் இணையதளங்கள் மற்றும் அலுவலகங்களில் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு4(1)(b) என்ற முக்கிய பிரிவின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
ண

0 Comments