💫cckkalviseithikal
📌பள்ளி மாணவனை நாய் எனத் திட்டிய ஆசிரியரை பணியிட மாறுதல் செய்து மாவட்டக்கல்வி அலுவலர் உத்தரவு.
![]() |
| CCK News |
📌திண்டுக்கல் அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் இடை நின்ற நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட 5 ஆம் வகுப்பு மாணவரை 'நாய்' என திட்டிய ஆசிரியை திருமலைப்புதுார் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தர விட்டுள்ளார்.
📌திண்டுக்கல் தாடிக் கொம்பு அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள 5ஆம் வகுப்பு மாணவர் இடை நின்றார். தனிநபர் ஒருவர் மாணவரிடம் பேசி அதே பள்ளியில் மீண்டும் சேர்த்தார்.
⚡இந்நிலையில் அந்த மாணவரை பள்ளி ஆசிரியை பாத்திமா 'நாய்' என திட்டியதால் பள்ளிக்கு வராது மாணவர் வீட்டில் இருந்தார். இதை அறிந்த தனிநபர் மாணவரை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியை பாத்திமாவிடம் முறையிட்டார்.
⚡இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் விபரம் நேற்று மதியம் 3:00 மணிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதியழகனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் வட்டாரக்கல்வி அலுவலர் செலின்மேரியிடம் விசாரிக்க உத்தரவிட்டார்.
💥அவர் ஆசிரியை, மாணவரை பள்ளியில் சேர்த்த நபரிடம் விசாரித்து அறிக்கை அளித்தார். அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், ஆசிரியை பாத்திமாவை திருமலைப்புதுார் தொடக்கப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

0 Comments