💫cckkalviseithikal💫
🔗ஆசிரியர் தகுதித் தேர்வு - மாற்றுத் திறனாளிகள் குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB
📄ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை விவரம்.
![]() |
| CCK TRB |
⚡ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025-ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.
cckkalviseithikal
📢அரசாணை (நிலை) எண். 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள்:28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் OMR விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் 30.01.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
🌟தகுதி பெற்ற தேர்வர்களுக்கு 02.02.2026 பி.ப முதல் தகுதிச் சான்றுகள் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்👇
Click here
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌟தற்போது அரசாணை (நிலை) எண் : 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள் : 25.02.2026 ல் மாற்றுத்திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🌟மேலும் இவ்வரசாணையில் நாள் 11.08.2025ன் படி ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025 வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் பொருந்தும் என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌟எனவே. மேற்கண்ட அரசாணையின் அடிப்படையில் மாற்றுத் திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு TET தேர்வில் தகுதி பெறுவதற்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் 60 (or) 40% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால்
📌தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த மாற்றுத்திறனாளி என்ற விவரத்தின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
📌மேலும், தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 👇
Click here
📝28.02.2026 முற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

0 Comments