💫cckkalviseithikal💫
💥வட்டார கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
🌀தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் வகுப்பு 1 வகை 1 ல் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை 50 விழுக்காடு அதே பணியில் வகுப்பு 1 வகை 2 ல் வரும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌟எனவே, வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2012-க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து மற்றும் 31.12.2025-க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) 01.01.2026 அன்றைய நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.
cckkalviseithikal
♦️2. எனவே, மாவட்ட அளவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று பதவி உயர்வு மூலமாக வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு முழுத்தகுதி பெற்ற
- ♦️ஊராட்சி நகராட்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றிய /அரசு /தலைமையாசிரியர்களின் விவரங்களை
- ♦️பின்வரும் அறிவுரைகளை நன்கு கவனத்தில் கொண்டு தயார் செய்து இணைப்பில் கண்ட படிவத்தினை கணினியில் தட்டச்சு செய்து
- ♦️ஒரு பிரதியினை 10.03.2026 இக்குள் இவ்வியக்ககம் வந்து சேரும் வண்ணம் பிரிவு எழுத்தர் மூலம் நேரில் சமர்பிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🎯தேர்ச்சி பெற வேண்டிய தேர்வுகளின் விவரம்:
![]() |
| CCK BEO (Department) Exam |
🚀துறைத் தேர்வுகள் (Department Exam)
- 📌1.தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் தேர்வு முதல் தாள்.
- 📌2.தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் தேர்வு இரண்டாம் தாள்
🚀சிறப்புத் தேர்வுகள்
- 📌3.சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் 1
- 📌4.தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல்
🔶3. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 தேர்வுகளிலும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலமாக நியமனம் செய்யப்படுவதற்கு முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு /மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் தயார் செய்து அனுப்ப வேண்டும்.
🔶4. நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெறாத ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர்களை இப்பட்டியலில் கண்டிப்பாக சேர்க்க கூடாது.
⚡அவ்வாறு சேர்க்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலகப் பணியாளர்கள் / அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். எனவே. இப்பட்டியல் தயார் செய்யும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
☀️5. பார்வை 4, 5ல் குறிப்பிட்ட அரசாணைகளின்படி 10+3+3, 11+2+3, 10+2+3, 10+3+2 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களை 10+2(மேல்நிலைப்படிப்பு) என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு இணையாக கருதி பரிந்துரை செய்து. அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
📍6. பார்வை 6 இல் காணும் அரசாணையில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச்சான்றினை மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை வெளியிடப்பட்டதை கருத்தில் கொண்டு செயல்படவும் தெரிவிக்கப்படுகிறது.
📍7. வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்று அத்துடன் B.Ed பட்டம் பெற்றிருப்பவர்களை மட்டுமே பரிந்துரை செய்து அனுப்புதல் வேண்டும். பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் பெறும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கல்விச் சான்றுகளை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஒரு குழு அமைத்து சரிபார்த்த பின்னரே பரிந்துரை செய்து அனுப்புதல் வேண்டும்.
💥8. ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பணிபுரியும் போது தவறுகள் செய்து குற்றச்சாட்டு /ஒழுங்கு நடவடிக்கை 17(b) நிலுவையில் உள்ளவர்கள், குற்றவியல் வழக்குகளில் உட்பட்டு உள்ளவர்கள் ஆகியோரது பெயர்களைக் கண்டிப்பாகப் பட்டியலில் சேர்க்கக் கூடாது.
⭐9. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு தண்டனைக் காலம் முடிவடையாத நிலையில் உள்ளவர்களின் பெயர்களை (Check Period) பரிந்துரை செய்தல் கூடாது.
✨10. வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான வரையறுக்கப்பட்ட படிவத்தில் அனைத்து கலங்களும் தவறாமல் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். கலத்திற்கு எதிரே கோடு போடுவதும் கலங்கள் பூர்த்தி செய்யாமல் விடுபடுவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் பொருத்தமான பதிலை எழுத வேண்டும்.
⭐என 11. 31.12.2025 தேதியில் தகுதிபெற்றவர்கள் மற்றும் தற்காலிக பணிஉரிமைவிடல் செய்து மீண்டும் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்க தகுதிபெற்றவர்கள் உட்பட எவரேனும் விடுபட்டிருப்பின் அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே (தொடக்கக் கல்வி) முழுப்பொறுப்பேற்க நேரிடும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தகுதிவாய்ந்தோர் பட்டியலில் விடுபட்டு பின்னர் முறையீடு தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு வர பெற்றால் அது சார்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. காலதாமதத்திற்கான பின்விளைவுகளுக்கு முற்றிலும் சார்ந்த பிரிவு பொறுப்பாளர் மற்றும் அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
🌀12. மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) மாவட்ட அளவிலான தகுதிவாய்தோர் பட்டியல்கள் பெறப்பட்டு பின்னர் மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, இதனை நன்கு கவனத்தில் கொண்டு இப்பணியை நிறைவு செய்வதில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) காலந்தவறாமையை கடைபிடித்து குறிப்பிட்ட நாளில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
cckkalviseithikal
🎯13. தகுதிவாய்ந்தோர் பட்டியலை எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாகத் தயார் செய்து அனுப்புவது சார்பாக, அந்தந்த மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டத்தை உடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டி, ஒன்றிய அளவில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமை மாவட்டக் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கல்வி அலுவலகத்திற்கு (தொடக்கக் கல்வி) நேரில் எடுத்து வரச் செய்து மிகக் கவனமாக பரிசீலனை செய்து இணைப்பில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பும்படி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்வதில் தனிகவனம் செலுத்தி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ஒரு பிரதியினை 10.03.2026 க்குள் சார்ந்த பிரிவு எழுத்தர் மூலம் நேரில் கொண்டு வந்து இவ்வியக்ககத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், படிவம் 2 Excell படிவமாக deeisection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments