💫cckkalviseithikal💫 🌀இடைநிலை ஆசிரியர் ஊதியம் - 45 செல் முடித்தவர்களின் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

💫cckkalviseithikal💫

🌀இடைநிலை ஆசிரியர் ஊதியம் - 45 செல் முடித்தவர்களின் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

CCK Ele Director Order 


Click here


தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவு விவரம் வருமாறு:



cckkalviseithikal
 அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம். புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் 01.01.2026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற Pay Matrix விரிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குவது தொடர்பாக 

  • தனியரின் பணி விவரங்களுடன் (பணிப்பதிவேடுகளைச் சரிபார்த்து) ஊதிய விவரங்களை அட்டவணையாக அனுப்பி வைக்குமாறும்


  • இப்பொருள் சார்ந்து இன்னும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளார்கள் என்ற விவரத்தினை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பார்வை 7.இல் காணும் 28.02.2026 அரசுக் கடிதத்தில் அறிவறுத்தப்பட்டதன்படி அரசாணை (நிலை) எண் 90. துறை நிதித் (ஊதியப் பிரிவு நாள் 28.02.2021இன்படி 
  • தங்களது மாவட்டக் கட்டுப்பாட்டின்கீழ் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து 2800 கிரேடு ஊதிய அணி அட்டவணையின்படி (Pay Matrix) ஊதிய உயர்வுகளைப் பெற்று 75.900 என்ற கடைநிலை ஊதிய விகிதத்தை அடைந்து தொடர்ந்து ஊதிய உயர்வுபெற Pay Matrix இல்லாத இடைநிலை ஆசிரியர்களின் எணணிக்கை விவரங்களை அரசுக்கு அனுப்ப எதுவாக உடனடியாக அனுப்பிவைக்குமாறும். 

  • அவ்வாறு அந்த இடைநிலை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை சரிபார்த்து ஊதிய உயர்வு விவரங்களை அட்டவணையாகவும். பணிப்பதிவேட்டின் நகலுடனும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி அறிவுறுத்தப்படுகிறது.

ஊதிய அட்டவணையில் 45 வது நிலையைக் கடந்த அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் அனுப்ப வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments