முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.



மார்ச்/ ஏப்ரல் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அவர்களின் தலைமையில் அனைத்து இணை இயக்குநர்கள் துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி/இடைநிலை/தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வு அலுவலர் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.







கூட்டப்பொருள்



மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பொதுத்தேர்வுகள் குறித்த அறிவுரை வழங்குதல்.



பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள்



(1) விடைத்தாட்கள் பாதுகாப்பு.



(2) வழித்தடம் திட்டமிடுதல்.



(3)வழித்தட அலுவலருக்கான வாகன வசதி / ஆயுதம் ஏந்திய காவலர் ஏற்பாடு செய்தல்.



(4) தேர்வு மையங்களில் உள்ள வசதிகள்.



(5) வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள்.





(6) மாவட்ட அளவிலான கூட்டம்:


(i) மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டம்.


(ii) கண்காணிப்பு அலுவலர் கூட்டம்.


(7) தேர்வு மைய பாதுகாப்பு ஏற்பாடுகள்.


மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து.


(i) சொல்வதை எழுதுபவர் புதிய நடைமுறை குறித்த ஏற்பாடுகள்.


(ii) சொல்வதை எழுதுபவர் பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் பயிற்சி.


(iii) திருப்புதல் தேர்வில் சொல்வதை எழுதுபவர் பணிக்காண ஏற்பாடுகள்.


தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் விவாதித்தல்.



Post a Comment

0 Comments