THIRAN திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
202526ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for
cckkalviseithikal
Improving Remediation & Academic Nurturing) இயக்கம் ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பார்வை(4)ல் காணும் செயல்முறைகளின்படி, அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் அடிப்படை கற்றல் விளைவினை அடையும் பொருட்டு, அரையாண்டு தேர்வு வரை THIRAN பயிற்சிப் புத்தகத்தின் முதல் பகுதி அடிப்படைக் கற்றல் விளைவுகள் பகுதி கற்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் தேர்வில் 68% மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னமும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் முழுஆண்டுத் தேர்வு வரை THIRAN பயிற்சி புத்தகம் கொண்டு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும்.
இதனை சார்ந்து பின்வரும் வழிமுறைகளை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, நடைமுறைப்படுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவறுத்தப்படுகிறார்கள்.
பாட வாரியாக 'அடிப்படை கற்றல் விளைவு(BLO Basic Learning Outcome) அடைந்த மாணவர்கள் வழக்கமான வகுப்பு நிலை பாடங்களை தொடரலாம். ஆனாலும், அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் 'THIRAN" மாதாந்திர மதிப்பீட்டில் பங்கு பெற வேண்டும்.
2. ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர தேர்வு, 28.01.2026 முதல் 30.012026 வரை வழக்கமான நடைமுறையின்படி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு நடத்தப்படும்.
3. இதற்கான மதிப்பெண் உள்ளீடு பணியை 31012026 முதல் 07.02.2026 வரை மேற்கொள்ளலாம்.
4. பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர தேர்வு, 25.02.2026 முதல் 27.02.2026 வரை வழக்கமான நடைமுறையின்படி தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு நடத்தப்படும்.
5. இதற்கான மதிப்பெண் உள்ளீடு பணியை 28.02.2026 முதல் 07.03.2026 வரை மேற்கொள்ளலாம்.
6. அரையாண்டுத்தேர்வினைப் போன்று, முழுஆண்டுத்தேர்விற்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு. THIRAN பயிற்சி புத்தகம் சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.
cckkalviseithikal
7. அரையாண்டுத்தேர்வினைப் போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான, பொதுவான BLO கேள்விகளாக இருக்கும்.
8. முழுஆண்டுத் தேர்வு மதிப்பெண்கள் "THIRAN*இயக்கத்தின் Endline தேர்வு மதிப்பெண்களாக கருதப்படும்.
9. இந்த கல்வியாண்டில் "THIRAN" பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் Minimum Learning Material" அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும்.
10. இந்த கல்வியாண்டில் "THIRAN" பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பு நிலை பாடங்களுக்கு தயாராகும் பொருட்டு அடுத்த கல்வியாண்டின் முதல் மாதம் "Bridge Course ஆக நடத்தப்படும்.

0 Comments