இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.

 இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.




*பெறுநர்:* 

                  *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,* 

                  *புனித ஜார்ஜ் கோட்டை,* 

                  *சென்னை - 600009.* 


*மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்,*


                  *பொருள்: இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதியம் போராட்டம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை - அதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைப்பு - சார்ந்து.*

                   *இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்.*

                  *மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மூன்று நபர்கள் ஊதிய குழுவின் அறிக்கையை பெற்று எங்களது ஒற்றைக் கோரிக்கையை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றிட உதவுமாறு வேண்டுகிறோம். மேலும் இந்த போராட்ட நாட்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து நமது ஆட்சியுடன் இடைநிலை ஆசிரியர்கள் என்றென்றும் தொடர்ந்து பயணிக்க எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.*


 *நன்றி!*           


தகவல் பகிர்வு ..


 *SSTA மாநில தலைமை*

Post a Comment

0 Comments