பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.01.2026 செவ்வாய்க்கிழமை

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.01.2026 செவ்வாய்க்கிழமை.



திருக்குறள்:

குறள் 211:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.


விளக்க உரை:

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.


பழமொழி :

"Learning is a ladder that never ends".

கற்றல் ஒரு முடிவில்லாத ஏணி.


இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

ஏமாற்றுவதை விட தோற்றுப் போவது சிறந்தது -ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு :

01.காந்திஜியை முதன்முதலில்  "தேசத்தந்தை" (Father of the Nation) என்று அழைத்தவர் யார்?

திரு.சுபாஷ் சந்திர போஸ்
Subhas Chandra Bose

02.இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை முதன்முதலில் வரைவு செய்தவர்  யார்?

திரு.ஜவஹர்லால் நேரு
Jawaharlal Nehru


English words :

Arid-extremely dry

Hiatus -break


தமிழ் இலக்கணம்:

பிறமொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி பாகம் 2
மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

2. கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன்


கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தேன்

3. அந்த நிர்வாகி மிகவும் நேர்மையானவர்


அந்த அலுவலர் மிகவும் நேர்மையானவர்


அறிவியல் களஞ்சியம் :

ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது


ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்

கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்

கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.


நீதிக்கதை

சொந்த இடம்

அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது.

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது.

ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது.

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது.

அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன.

அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது.

ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.


இன்றைய செய்திகள்

06.01.2026

⭐சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயில் தடம்புரண்டு விபத்து. பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

⭐ சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கையால் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சைபர் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடி மீட்கப்பட்டுள்ளது.

⭐ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து ஈரானின் 22 மாகாணங்களின் 100-க்கும் அதிகமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.


Today's Headlines

⭐Passenger express train derails in Sethupattu. There was no damage, as no passengers on the passenger express train.

⭐ Due to the prompt action of the Chennai Metropolitan Police Cyber ​​Crime Division police stations, Rs. 25.97 crore lost by the public to cyber fraud in the last year alone has been recovered.

⭐Thousands of people have taken to the streets in more than 100 locations across 22 provinces of Iran to protest the economic crisis in the country.

SPORTS NEWS

🏀The 5th and final match of the 5-match Ashes series between Australia and England is being played in Sydney. Starc has dismissed Ben Stokes 5 times in this Ashes series. Also, He holds the record for being the bowler to dismiss Ben Stokes the most times.

Covai women ICT_போதிமரம்

Post a Comment

0 Comments