பணியில் உள்ள ஆசிரியர்களின் - ஆசிரியர் தகுதித் தேர்வு TET சார்ந்த விவரங்கள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.1282505/டி1/2025, நாள்.06.01.2026
cckkalviseithikal
பொருள்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி அனைவருக்கும் இலவச மற்றும் மாண்பமை கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 உச்சநீதிமன்றத்தில் தெராடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கு எண் 1385/2025(SLP) தீர்ப்பாணை பெறப்பட்டது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கட்டயாம் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீர்ப்பாணையினால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த இந்திய அரசு கல்வித்துறை அமைச்சக இணை செயலாளருக்கு அறிக்கை அனுப்புதல். தொடர்பாக,
பார்வை:
1 அரசாணை (நிலை) எண் 181 பள்ளிக் கல்வி (C2) த் துறை நாள் 15.11.2011
2. அரசாணை (நிலை) எண் 12. பள்ளிக் கல்வித் துறை (தொக 1(1)) நாள் 30.01.2020,
3. அரசாணை (நிலை) எண் 156, பள்ளிக் கல்வி (ஆ.தே.வா.) நாள் 17.07.2025
4. புதுடெல்லி மாண்புமிகு உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) வழக்கு எண் 1385/2025 தீர்ப்பாணை நாள் 0109.2025.
5. பள்ளிக் கல்வித்துறை கூடுதல் அரசு செயலாளர் அவர்களின் நேர்முக கடிதம் எண் 449/பக.3(2)/2025 நாள் 06.012026
பார்வை 5-ல் காணும் பள்ளிக் கல்வித் துறை அரசு கூடுதல் செயலாளர் அவர்களின் கடிதத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பெறும் பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் தனிப்பட்ட கவணம் ஈர்க்க விழைகிறேன்.
அதில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டயாம் என தொடரப்பட்ட பல்வேறு வழக்கின் தீர்ப்பாணையின் மீது மாண்புமிகு புதுடெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) வழக்கின் (1385/2025) தீர்ப்பாணை 01.09.2025 அன்று வழங்கப்பட்டது.
மேற்காணும் உச்ச நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் தொடக்க்க் கல்வி இயக்க்க கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த இந்திய அரசு கல்வித்துறை அமைச்சக இணை செயலாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் இத்துடன்
cckkalviseithikal
இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரத்தினை முழுமையாக பூர்த்தி செய்து மறு மின்னஞ்சலில் (PRESections@gmail.com) இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை மிக மிக அவசரம் எனக் கருதி உடன் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநருக்காக

0 Comments