NMMS Examination Jan 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்.
Click here
DGE Portal ல் பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய
விவரங்கள்:
NMMS தேர்வுக்கு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் ( மாணவரின் பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு இடம் பெற வேண்டுமோ அதன்படி) EMIS இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் பின்னர் DGE Portal ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர் பெயர், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம், கைபேசி எண் போன்ற விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.
மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (OTP) விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைபேசி எண்ணை குறைந்தது தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும்.
cckkalviseithikal
3. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள தேசிய அட்டையினை மாணவர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று உறுதி செய்த பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
5. பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் (Pin Code) பதிவு செய்யப்படவேண்டும்.
6. வீட்டு முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.
7. பெற்றோரின் தொலைபேசி/கைப்பேசி என்ற கலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிவிட வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற கலத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும்.
8. பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
9. பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் தேர்வுக் கட்டணத்தினை செலுத்துவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது.
10. மேற்படி தேர்விற்கான ஆன்லைன் கட்டணம் ரூ.50/- வீதம் DGE Portal-ல் ஆன்லைனில் அனைத்து விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்த பிறகு ஆன்லைன் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள். 20.12.2025 ល 06.00 1.
பதிவேற்றம் முடிந்தவுடன் விண்ணப்பித்த தேர்வர்களின் விவரப்பட்டியலினை (Summary Report) (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம் ஆன்லைன் கட்டணம் செலுத்திய பின்) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்களிடம் 22.12.2025-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த பள்ளிகளில் இருந்து ஆன்லைன் கட்டணத் தொகை தேர்வர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதி செய்து சரிபார்த்து கொள்ள வேண்டும்.

0 Comments