தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV) - திட்டம்.

 தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV) - முதலமைச்சர் அடுத்த மாதம்  தொடங்கி வைக்கிறார்.

Click here




cckkalviseithikal

செய்தி வெளியீடு எண்: 2975

ஓநாய்: 12.12.2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில்

தொடங்கப்படவுள்ள HPV - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 3.38 இலட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள்- மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (12.12.2025) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டு, விழிப்புணர்வு குறும்படத்திற்கான குறுந்தகடு வெளியிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சேவை பணியில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகளுக்கு, சிகிச்சை மையங்களுக்கு, மருத்துவர்களுக்கு. தன்னார்வலர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

பிறகு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-செய்தியாளர்களிடம்

உலக எய்ட்ஸ் தினம் 2025

மக்களிடையே எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் Overcoming disruption, transforming the AIDS response" "இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்" எனும் தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. 2030க்குள் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத வகையில் தமிழ்நாட்டை மாற்றுகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, தனி கவனம் செலுத்தப்பட்டு புதிய எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாநில அரசு அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எச்ஐவி தடுப்பு பணியினை திறம்பட செய்து வருகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றின் தாக்கம் மிக மிக குறைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்தியாவின் எச்ஐவி பாதிப்பு என்பது 0.23% ஆக இருந்து வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் எச்ஐவி பாதிப்பு என்பது 0.16% ஆக இருந்து வருகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 100% கருவுற்ற தாய்மார்களுக்கு எச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு

cckkalviseithikal

தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. எச்ஐவி தொற்றை கண்டறிய 2600 நம்பிக்கை மையங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கு 81 இடங்களில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் மையங்கள் செயல்பட்டு வருகிறது. 172 இடங்களில் இணை கூட்டு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. எச்ஐவி பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மூலம் பிறக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று நீக்கத்தின்படி ARV தடுப்பு மருந்தும். பிறப்பு முதல் 6 அல்லது 12 வாரம் வரை Nevirapine (அ) Zidovudine சொட்டு மருந்து (அ) இரண்டும் இணைந்த இரட்டை தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த தன்னார்வ பரிசோதனை முகாம்கள் (Integrated Health Campaign) ஏற்படுத்தி. எச்.ஐ.வி தொடர் சங்கிலி தொற்றினை கண்காணித்து (Index Case Finding and Testing) எச்.ஐ.வி தொற்றுள்ளோரின் பாலியல் பங்காளர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீவிர பரிசோதனை முகாம்கள் (Index testing campaign) மாவ எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகளின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.



தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி தொற்று பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு வைப்பு நிதியுடன் கூடிய அறக்கட்டளை தொடங்குவதற்கு 2009இல் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். அது தற்போது ரூ.29 கோடியாக உயர்வு பெற்றிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்த துறையில் எச்ஐவி/எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு என்று மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தை அறிவிக்க அறிவுறுத்தினார்கள். அந்தவகையில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக மாதந்தோறும் 7.618 குழந்தைகளுக்கு ரூ.1,000/- வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் 584 கல்லூரிகளிலிருந்து 14,878 மாணவ, மாணவியர்கள் இணையத்தின் வாயிலாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். இப்படி பல திட்டங்கள் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சித்தாமாரி என்று சொல்லக்கூடிய மாவட்டத்தில் நேபாளத்தை ஒட்டி இருக்கின்ற மாவட்டம். ஆன்மீக நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை நெற்றியில் கத்தியினைக் கொண்டு இரத்தம் வழிய ஒரு கீரலை போடுவதாக சொல்கிறார்கள். அது அவர்களுடைய நம்பிக்கை சார்ந்தது. அதில் நாம் பெரிய அளவில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றாலும் ஒரே கத்தியில் பல பேருக்கு நெற்றியில் கோடு போடுவது மூலம் ஒரு மாவட்டத்தில் மட்டும் 7500 பேர் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அதில் குழந்தைகள் 400 பேரும்கூட அடங்குவர். இதுபோன்ற செயல்கள் மூலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் ஏதாவது

cckkalviseithikal

ஏற்படுவது தொடர்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னாள் இரத்த ஓவியம் வரைகின்ற 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கடைகள் மூலம் இல்லாமல் வீடுகளில் செய்கிறார்கள என்று கண்காணிக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஊசிகளை எப்படி கையாள்வது போன்ற பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வரும் காரணத்தினால்தான் இந்தியாவிற்கான பாதிப்பு சதவிகிதத்தில் இருந்து தமிழ்நாடு குறைந்த அளவிலான பாதிப்புகள் இருந்துக் கொண்டிருக்கிறது என்றாலும், இதில் பூஜ்ஜியம் என்கின்ற வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் எட்டுவது என்கின்ற நடவடிக்கை இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

Post a Comment

0 Comments