ஓய்வூதிய வழக்கில் மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 ஓய்வூதிய வழக்கில்  மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.



திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (15.12.2025)விசாரணைக்கு வந்தது.


 இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டி உள்ளதால் அவகாசம் தேவை என்று கேட்டார். இதனை அடுத்து நீதியரசர்கள் மனுதாரரின்  புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்த எழுத்துப் பூர்வமான கேள்விகளுக்கு வரும் புதன்கிழமை எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டு நீதியரசர்கள் 17.12.2025 அன்றைக்கு  வழக்கை ஒத்திவைத்தனர்.


கூடுதல் தகவல் 

ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!


தமிழ்நாட்டில் 01.04.2003ற்குப் பின்னர் பணியேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் பிரெடெரிக் எங்கெல்ஸ் 2012ல் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது இதுவரை

13 ஆண்டுகளாக


21 நீதிபதிகளால்


விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வரை


விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்ட இவ்வழக்கின்,


50வது விசாரணை


மனுதாரர் தரப்பு கேள்விகளுக்கு அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க,


இந்திய ஓய்வூதியர் தினமான டிசம்பர் 17


அன்று, விசாரணைக்கு வர உள்ளது.

Post a Comment

0 Comments