ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
cckkalviseithikal
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
5.5..0028/8/63/2025, . 17.11.2025.
முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்
பொருள்:
பள்ளிக்கல்வி அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க அரசின் ஆணை பெறப்பட்டது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் - சார்பு.
பார்வை :
அரசாணை (நிலை) எண்.125. பள்ளிக்கல்வித்(பக5(1)) துறை, .21.05.2025.
பார்வையில் காணும் அரசாணையில் கற்றல் அனுபவத்தை புதுமையாக மாற்றியமைத்தலில் மேன்மை ஏற்படுத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கவும், ஆசிரியர்களின் அசாதாரண சிந்தனை திறன் அவர்களின் மாணவர்களுக்கான கல்விப் பயணத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு செயல்பாடுகளை சீரமைக்க சக ஆசிரியர்களை தூண்டும் வகையில் செயல்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
cckkalviseithikal
மேலும் இதனை செயல்படுத்தும் விதமாக 2025-26 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்களை தெரிவு செய்து இச்சான்றிதழ் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே 2025-26 ஆம் ஆண்டிற்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மாவட்ட அளவில் 10 ஆசிரியர்களை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து இச்சான்றிதழை வழங்க வேண்டும். தெரிவு செய்யும் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர். அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் அல்லது அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கொண்ட உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெற வேண்டும். அவ்வாறு ஆசிரியர்களைத் தெரிவு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அதன் அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு -
பார்வையில் கண்ட அரசாணை நகல்
இயக்குநர்

0 Comments