SIR இரவில் பணி - ஆசிரியர் கூட்டணி கண்டனம்

 SIR இரவில் பணி - ஆசிரியர் கூட்டணி கண்டனம்.



cckkalviseithikal 

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் காலை 8 மணி முதல் இரவு 8-9 மணி வரை பணி செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டக் கிளை குற்றம் சாட்டியுள்ளது.

நவம்பர் 6 முதல் நடைபெறும் இப்பணியால் பல பெண்ணாசிரியர்கள் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

இரவு 6 மணிக்கு மேல் பெண் அலுவலர்கள் பணியில் இருக்கக் கூடாது என்ற சுற்றறிக்கை மீறப்படுவதும், இரவு 9 மணிக்குப் பிறகு எஸ்ஐஆர்  படிவங்களைப் பதிவேற்றக் கட்டாயப்படுத்துவதும் மனித உரிமை மீறல் என கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

cckkalviseithikal

தேர்தல் பணி அழுத்தத்தால் ஏற்கெனவே நாடு முழுவதும் ஆறு பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பள்ளிப் பணிகள், குறிப்பாக இரண்டாம் பருவத் தேர்வுகள் பாதிக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து, கொரோனாவுக்குப் பிந்தைய பின்னடைவு மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இப்பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து, அதற்குப் பதிலாக வேலையில்லாத பட்டதாரிகளை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.

மேற்கண்ட கடிதம் தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments