S.I.R படிவம் 2025 நிரப்புதல், 2005 அல்லது 2002 ஆம் வருடத்தின் விவரங்களை நிரப்புவதற்கான வழிமுறைகள்.
Click here
மேற்கண்ட இணைப்பில் சென்று Name search இல் உங்கள் பெயர், உங்கள் தந்தை பெயர் தமிழில் பதிவு செய்து தேடவும்.
அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் Click செய்து மாவட்டம் தொகுதி தேர்வு செய்து உங்கள் வாக்குச்சாவடி எது என தேர்வு செய்யவும்.
2005 இல் உங்கள் பெயர் இல்லை என்றால் 2002 இல் பதிவு செய்து பார்க்கவும்.
அதில் உங்கள் பெயர், வரிசை எண் என்ன என்பதை பார்த்து எழுதிக் கொள்ளவும்.
இந்தியத் தேர்தல் ஆணையம்
கணக்கீட்டுப் படிவத்தினை நிரப்புவதற்கான தகவல்
வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் வாக்காளர்களின் உறவினர்களின் பெயர்களை முந்தைய வாக்காளர் பட்டியலில் https voters...in என்ற இணையதளத்தில் சரிபார்த்து அவ்விவரங்களை கணக்கீட்டுப் படிவத்தில் நிரப்பலாம். இது தொடர்பான உதவிக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரை(BLO) அணுகலாம். கணக்கீட்டுப் படிவத்தில் முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை தெரிவிக்காத மற்றும் தெரிவித்த விவரங்கள் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்துப்போகாத வாக்காளர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) ஒரு அறிவிப்பை வழங்குவார் அந்த அறிவிப்பை பெறும் வாக்காளர்கள் கீழ்க்கண்ட வகைகளுக்கு ஏற்ப ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
01.07.1987 க்கு முன்பு இந்தியாவில் பிறந்திருந்தால்
cckkalviseithikal
பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில், கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தங்களுக்கு (Salf) உரிய ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
01.07.1987 முதல் 02.12.2004 வரை உள்ள காலப்பகுதியில் இந்தியாவில் பிறந்திருந்தால்.
பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில், கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தங்களுக்கு (Self) உரிய ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
02.12.2004 க்குப் பிறகு இந்தியாவில் பிறந்திருந்தால்.
பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில், கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தங்களுக்கு (Self) உரிய ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
c தந்தையின் பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து எதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
o தாயின் பிறந்த தேதி மற்றும்/அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியர் அல்லாதவர் என்றால், நீங்கள் பிறந்த நேரத்தில், அப்போதைய அவரது செல்லுபடியாகிய கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவின் நகலை சமர்ப்பிக்கவும்.
இந்தியாவிற்கு வெளியே பிறந்திருந்தால் (வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்கிய பிறப்புப் பதிவுச் சான்றினை இணைக்கவும்)
பதிவு / இயல்பு நிலை வாயிலாக இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருந்தால் (குடியுரிமைப் பதிவுச் சான்றிதழை இணைக்கவும்)
கணக்கீட்டுப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் குறிப்பான பட்டியல் (முழுமையானது அல்ல) (வாக்காளர் தனது (Self), அவரது தந்தை மற்றும் தாய்க்கு சமர்ப்பிக்க வேண்டிய தனித்தனி சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்).
1. மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்/ ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ ஓய்வூதிய ஆணை.
2. 01.01.1987 க்கு முன்னர் இந்தியாவில் அரசு/உள்ளாட்சி அமைப்புகள்/ வங்கிகள்/ அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசி/ பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/சான்றிதழ்/ ஆவணம்.
3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
4. கடவுச்சீட்டு
5. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் மெட்ரிகுலேஷன் / கல்விச் சான்றிதழ். வழங்கப்பட்ட
6. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்
7. வன உரிமைச் சான்றிதழ்
8. தகுதிவாய்ந்த அதிகாரி வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) / அட்டவணை வகுப்பினர் (SC) / பழங்குடியினர் (ST) அல்லது பிற சாதிச் சான்றிதழ்.
9. தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள இடங்களில்)
10. மாநில/உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு.
11. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.
12. ஆதார் அட்டைக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடித எண். 23/2025-ERS/Vol.Il நாள் 09.09.2025-இல் (இணைப்பு-II) வெளியிடப்பட்ட அறிவுரைகள் பொருந்தும்.
13. 01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி



0 Comments