NILP தேர்வு நடத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பொருள்:
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பள்ளிக் கல்வி இயக்ககம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 2025-26ஆம் ஆண்டு செயல்பாடுகள் -இரண்டாம் கட்டம் * கற்போருக்கு 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு.
பார்வை:
1 2025-26ஆம் ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத் திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட (PAB) நாள் 25:04:25
2 இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண். 031/ஆ2/2025 நாள்: 16.6.2025 மற்றும் 3.11.2025.
தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2022-23ஆம் ஆண்டு முதல் 2024-25ஆம் ஆண்டு வரை 15 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
பார்வை-2 இல் காணும் செயல்முறைகளின்படி, 2025-26ஆம் ஆண்டில் எழுதப்படிக்கத் தெரியாதோர் அனைவரையும் முழுமையாகக் கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் திட்டச் செயல்பாடுகளை இரண்டு கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், முதற்கட்டத்தில் கண்டறியப்பட்ட 537876 பயனாளிகளுக்கு ஜூன் 15 2025 இல் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்தறிவுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக கண்டறியப்பட்ட 963171 பயனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 37075 கற்போர் எழுத்தறிவு மையங்களில் இணைந்து அவர்களுக்கு தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் 2025-ஜீலை மாதம் முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, இரண்டாம் கட்டத்தின்கீழ், விரிவான கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் இணைப்பில் கண்டுள்ளபடி
cckkalviseithikal
எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 9.63 இலட்சம் கற்போருக்கு வருகின்ற 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

0 Comments