நவம்பர் 2025 மாத சிறார் திரைப்படம் "காக்கா முட்டை" திரையிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் கதைச் சுருக்கம்.
Click here
கதைச் சுருக்கம்
காக்கா முட்டை
cckkalviseithikal
சென்னையின் குடிசைவாழ்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றிய படம் காக்கா முட்டை மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் முட்டைகளை அண்ணன் தம்பிகளான இந்த சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவதால் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்கள். கூட்ஸ் ரயிலில் இருந்து கீழே விழும் நிலக்கரியை எடுத்து விற்று அதில் வரும் வருவாயை அம்மாவுக்குக் கொடுக்கின்றனர். இது போக கிடைக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
அவர்கள் வாழும் பகுதிக்கு அருகில் ஒரு புதிய பீட்சா கடைத் திறக்கப்படுகிறது. பீட்சா என்பது புதிய உணவுப்பொருள் என்பதாலும் பார்ப்பதற்கு வண்ணமயமாய் இருப்பதாலும் சாப்பிடும் ஆசை இந்தச் சகோதரர்களுக்கு ஏற்படுகிறது. கடைக்கு உள்ளே கூட இவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த சகோதரர்களுக்கு எப்படியேனும் கடைக்குள் சென்று பிட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வருகிறது. அதன் விலை 300 ரூபாய் என்று தெரிய வந்ததும் அம்மாவுக்குத் தெரியாமல் பணத்தை சேமிக்கின்றனர். பணம் சேர்த்தும் அவர்களால் பிட்சா கடைக்குள் நுழையமுடியவில்லை. அதையும் மீறி அவர்கள் உள்ளே செல்ல முயல, அங்கு அவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. பீட்சா கடையில் நடந்தது அம்மாவுக்குத் தெரியவேண்டாம் என்று நினைக்கின்றனர். அதையும் மீறி எல்லோருக்கும் தெரிய வர, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
பீட்சா சாப்பிட வேண்டும் என்று ஆசையுள்ள இரண்டு குழந்தைகளை மையமாகக் கொண்டு தொடங்கும் இந்தப் படம், குழந்தைகளின் இயல்பான உலகம், ஆசைகள், விடாமுயற்சி, சகோதரத்துவம், மற்றும் நகரங்களின் வாழ்க்கை நிலைகளின் வித்தியாசங்களையும், நுகர்வு கலாசாரம் எவ்வாறு நம் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் வடிவமைக்கிறது என்பதையும் ஆழமாக பேசுகிறது.
நகரத்தின் புறநிலைப் பகுதிகளில் உழைத்து வாழும் குடும்பங்களின் தினசரி போராட்டங்களையும், அவர்கள் வாழ்க்கையின் எளிமை மற்றும் அழகையும் குழந்தைகளை வைத்து நுணுக்கமாக காட்டியதற்காக பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது இந்தப் படம்

0 Comments