மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2 அரசாணைகள் வெளியீடு.

 மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் -  2 அரசாணைகள் வெளியீடு.

மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியிட்டுள்ளது.

Click here



பள்ளிக் கல்வி மாநிலக் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்குதல் கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி (க.ஆப) துறை

அரசாணை (நிலை) எண்.251

05.11.2025

திருவள்ளுவர்ஆண்டு 2056

விசுவாவசு வருடம் ஐப்பசி 19

cckkalviseithikal

படிக்கப்பட்டவை:-

1. அரசாணை (நிலை) எண்.147, பள்ளிக் கல்வித் (கஆப) துறை, நாள் 30.06.2017.

2 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன 4.55.5.6.924911/2/2024, 25.10.2025.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையிலும், கல்வியில் சமூக சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கிலும், தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபினை உள்ளடக்கிய கலைத்திட்டம் உருவாக்குவது இன்றியமையாததாகும் என்றும், மாநிலக் கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூகநீதி மற்றும் உள்ளடங்கிய கல்வி ஆகியவற்றின் அடிப்படையில், அனைத்து மாணவர்களும் இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற திறன்களான கூர்சிந்தனை, படைப்பாற்றல், எண்மக் கல்வியறிவு, நிதிசார் அறிவு, காலநிலைக் கல்வி, உடல்நலம் மற்றும் பாதுகாப்புசார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் கலைத்திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்படுவதை தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 வலியுறுத்துகிறது என்றும், இக்கல்விக் கொள்கையின் அடிப்படையில், எதிர்காலச் சமூகம், பயனுறும் வகையில் மாணவர்களை மனித வளங்களாக உருவாக்கிட, தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான

cckkalviseithikal

கலைத்திட்ட வடிவமைப்பு-2025 மற்றும் அதனடிப்படையில் மாணவர்களின் வயதிற்கேற்ற பாடத்திட்டம், பாடப்பொருள் உருவாக்கம், கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குவது ஆகியவை அவசியமாகின்றன என்றும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கையின் அடிப்படையில் பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்தாலோசித்து இறுதி செய்திடும் வகையில், மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவினை மாற்றியமைத்து மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் புதிய கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழுவினை அமைத்து ஆணை வெளியிடுமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் பின்வரும் வல்லுநர்களை உறுப்பினர்களாக கொண்டு புதிய கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழுவினை அமைத்து ஆணையிடப்படுகிறது.

Post a Comment

0 Comments