சிறப்பு தகுதித் தேர்வுக்கு STET பயிற்சி அளிக்க கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு

சிறப்பு தகுதித் தேர்வுக்கு (S TET) பயிற்சி அளிக்க கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு.

Click here




பொருள்

பள்ளிக் கல்வி

அனைவருக்கும் கட்டாய் கல்வி உரிமைச்சட்டம் 2009 மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்ப அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணை பெறப்பட்டது - பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துதல்-பயிற்சி வழங்குதல் - தொடர்பாக

பார்வை

அரசாணை (நிலை) எண் 231, பள்ளிக் கல்வித் துறை, நாள் 13.10.2025.

பார்வையில் காணும் அரசாணையில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.


2. எனவே, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் /வருவாய் வட்டம் / இணையவழியில் (online) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(DIETs) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் நம்பிக்கையுள்ள,



Post a Comment

0 Comments