PGTRB -உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு

 PGTRB -உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு.

விவரங்களை அறிய 👇

Click here





cckkalviseithikal

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

முதுகலையாசிரியர் / கணினி பயிற்றுநர் (நிலை-1) மற்றும் உடற்கல்வி இயக்குநர் (நிலை1) பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு- 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.02/2025, நாள்.10.07.2025ன்படி 809 மையங்களில் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. cckkalviseithikal 14

இத்தேர்வில் 2,20,412 தேர்வர்கள் தேர்வெழுதினர். அதற்கான உத்தேச விடைக்குறிப்பு மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனைகள் தெரிவிக்க Objection Tracker URL (https://trb1ucanapply.com) தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 15.10.2025 முதல் 26.10.2025 பிற்பகல் 05.30 மணி வரை உரிய ஆட்சேபனையினை பதிவு செய்திடல் வேண்டும்.

சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது

: 15.10.2025

தலைவர்.

Post a Comment

0 Comments