திருமண / கல்விக் கடன் முன்பணம் கோரும் அரசு பணியாளர்களுக்கு சார்ந்த அலுவலக தலைவர் அனுமதித்து, IFHRMS மூலம் ஒப்புதல் அளிக்க உத்தரவு.
Click here
உத்திரவு :
cckkalviseithikal
பார்வை (1) மற்றும் (2)இல் காணும் அரசாணைகளின்படி, அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது மகன்/ மகள்களுக்கு திருமண/கல்வி செலவிற்காக திருமண முன்பணமாக ரூ.5,00,000/-மும் (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) கல்விக் கடனாக ரூ.1,00,000/-( (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) அனுமதித்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தகுதியான கருத்துருக்கள் விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு, பார்வை (3)இல் காணும் கடிதங்களின்படி சென்னை கரூவூலக் கணக்கு இயக்குநர் அவர்களுக்கு திருமண/கல்விக் கடன் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்கள் மீது முன்பணம் அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்திட பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது.
இந்நேர்வில் பார்வை (4)இல் காணும் கடிதத்தில், திருமண / கல்விக் கடன் முன்பணம் கோரும் அரசு பணியாளர்களுக்கு சார்ந்த அலுவலக தலைவர் திருமண முன்பணத்தை அனுமதித்து, IFHRMS மூலம் ஒப்புதல் அளித்து. முன்பணம் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், முன்பணத்திற்கான நிதி ஒதுக்கீடு 22.09.2025 முதல் மையப்படுத்தப்பட்டுள்ளதால் (Centralised) IFHRMS-மூலமாகவே அனுமதித்திட நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வியக்ககத்திலிருந்து அனுப்பப்பட்ட திருமண/கல்வி கடன் முன்பணம் அனுமதிப்பது சார்பான கருத்துருக்கள் மீது நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படாமல் பணம் பெற்று வழங்கும் அலுவலர் நிலையிலேயே மேற்காண் விபரப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து கருத்துருக்களையும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, நாளது தேதிவரை மாவட்டங்களிலிருந்து, இவ்வியக்ககத்தில் பெறப்பட்ட திருமண/கல்விக்கடன் முன்பணம் சார்பான கருத்துருக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS களஞ்சியம் 2.0 செயலி மூலமாக திருமண/கல்விக்கடன் முன்பணம் அனுமதித்திட ஏதுவாக பெறப்பட்ட கருத்துருக்கள் மீள சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. கருத்துருக்கள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்)
2.0 மேலும் இனிவருங்காலங்களில் திருமண/கல்விக்கடன் முன்பணம் கோரும் பணியாளர்கள்/ அலுவலர்களுக்கு அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS களஞ்சியம் செயலி மூலமாக அனுமதித்திடவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. திருமண/கல்விக்கடன் முன்பணம் சார்பாக எதிர்வரும் நாட்களில் பெறப்படும் கருத்துருக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இவ்வியக்ககத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பார்வை 1ல் காணும் அரசாணையில் முன்பணம் அனுமதிப்பது குறித்தான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து. முன்பணம் அனுமதித்திடவும், எதிர்வரும் நாட்களில் முன்பணம் அனுமதித்தது தவறு என தெரியவரும் பட்சத்தில் அதற்கு அனுமதியளித்த அலுவலக தலைவரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் மற்றும் IFHRMS களஞ்சியம் 2.0 செயலி (sanction order process)
cckkalviseithikal
ஓம்/-(ச.கண்ணப்பன்)
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர்

0 Comments