ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல கருத்துருகள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு செயல்முறைகள்

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல கருத்துருகள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு செயல்முறைகள்.

Click here




cckkalviseithikal

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வெளிநாடு செல்ல துறைத்தலைவரின் அனுமதி கோரி சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கைகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலங்களில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுத்தப்படுவது பள்ளிக்கல்வி இயக்குநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் அனுமதி கிடைக்கப் பெறாததால் மருத்துவ சிகிச்சை, மகள் பிரசவம் போன்ற பல அத்தியாவசிய காரணங்களை முன்னிட்டு வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் பள்ளிக்கல்வி இயக்குநரின் அனுமதியினைப் பெற்று வெளிநாடு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இந்நிலை வருங்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

கருத்துருக்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து பெறப்பட்டால் மட்டுமே பரிசீலிக்க இயலும் என்ற நடைமுறையை பின்பற்றிட அவசியம்இல்லை என தெரிவிக்கப்படுகிறது. அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களது விண்ணப்பங்கள்

cckkalviseithikal

அந்தந்த அலுவலகத் தலைவர் மூலமாகவும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பான விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நேரடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடன் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் சார்ந்த இணை இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலும், பார்வை 1 ல் காணும் அரசாணை பத்தி 6 ல் குறிப்பிட்டவாறு சுற்றுலா மற்றும் மத சார்பான பயணம். உறவினர்,நண்பர்களை காண வெளிநாடு செல்லும் ஆசிரியர் பணியாளர்களிடம் பிணை முறிவு படிவம் ஏதும் பெறப்பட வேண்டியதில்லை என்பதால் உள்ளூர் காவல் நிலைய சான்று, ஏனைய இரண்டு ஆசியர்களின் பிணை முறைவு சான்று, வங்கி பாஸ்புத்தகத்தின் நகல்கள் போன்ற தேவையற்ற விவரங்களை ஆசிரியரிடம் கோரி வீண் தாமதம் செய்தல் கூடாது.

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் தனது ஆளுகையின் கீழ் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகள் அலுவலகங்களுக்கு இச்செயல்முறையின் நகலினை அனுப்பி ஒப்புதல் பெற்று அலுவலகக் கோப்பில் வைக்க வேண்டும். மேலும், வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கருத்துருக்கள் பயண தேதியிலிருந்து 15 தினங்களுக்கு முன்பாக இவ்வியக்ககத்தில் பெறப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செயல்முறைகளைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் மறு அஞ்சலில்

இவ்வியக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments