பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here



cckkalviseithikal

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006.

முன்னிலை: முனைவர்.ச.கண்ணப்பன்

ந.க.எண். 062455/எம்/இ1/2025, நாள்: 21-10-2025

பொருள்

பள்ளிக்கல்வி - பள்ளி கட்டடச் சுவர்களில் மழைக்காலங்களில் தோன்றும் செடிகள் மற்றும் கொடிகள் அகற்றுதல் பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பாக பராமரித்தல் சார்பாக.

பார்வை

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006. ந.க.எண். 062455/6எம்/இ1/2025, நாள் 05-10-2025

பார்வை கடித்த்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும் விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பள்ளி கட்டிடங்களின் வெளிப்புறம் மற்றும் உள்புறச் சுவர்களில். மேல்தளங்களில் மற்றும் கூரைகளில் கொடிகள் மற்றும் செடிகள் போன்றவை வளர்ந்திருந்தால் வளர்ந்துள்ள செடிகள் கட்டிடத்தின் சுவர்களில் ஈரப்பதம் போன்றவற்றால் ஊடுருவச்செய்து கட்டிடத்தின் உறுதித் தன்மையை பாதிக்கக்கூடும். மேலும் இவை பள்ளியின் பாதுகாப்பிற்கு அபாயத்தினை வழி வகுக்கக்கூடியவை.

எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளி வளாகத்திலுள்ள அனைத்து கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள், சுவர்கள். மற்றும் பிற கட்டிடங்களை ஆய்வு செய்து, சுவர்களில் அல்லது அருகே

வளர்ந்துள்ள செடிகள், கொடிகள், புதர்கள் ஆகியவற்றை அடையாளம் காணவும்.

அத்தகைய செடிகள் மற்றும் கொடிகள் உடனடியாக வேருடன் அகற்றவும்.

அகற்றப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து, தேவையான இடங்களில் பசை / நீர்ப்புகாமல்

இருக்க பூச்சு செய்யவும்.

cckkalviseithikal

மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் வளர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சுத்தமான பள்ளி வளாகத்தைப்

பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவினை பள்ளி பராமரிப்பு நிதி அல்லது அனுமதிக்கப்பட்ட பிற நிதி வழியாகச் செய்யலாம். அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து, பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பு சுத்தம் மற்றும் பொலிவான தோற்றம் நிலைநிறுத்தப்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒம்/ச.கண்ணப்பன்

பள்ளிக் கல்வி இயக்குநர்,

Post a Comment

0 Comments