தீபாவளி - பட்டாசு வெடித்தல் சார்ந்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பொதுமக்களால் 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய நல்ல நாளில், சில இடங்களில் மக்களின் கவனமின்மை, அலட்சியமாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறார்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகளை பள்ளி மாணவ /மாணவியர் பின்பற்றிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தக்க அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியின் தகவல் பலகைகளில் ஒட்டி நலத்திட்டங்கள் பெற வரும் மாணாக்கர்கள் / பெற்றோர்கள் அறியும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநரின் கடிதத்தில் பின்வருமாறு தீபாவளி பண்டிகை 2025, தீபாவளி பண்டிகையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பட்டாசுகளை கொளுத்துபோது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டான் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.
2. பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒருவாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.கால்களில் காலணி அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்.
3. பட்டாசுகளை கொளுத்தி, கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள் வெடிகளை வெடிக்கச் செய்ய நீளமான ஊதுவர்த்தியினை பயன்படுத்தி பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வெடிக்கச் செய்ய வேண்டும்.
4. மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கச் செய்யாதீர்கள்.
5. ராக்கெட்டுகள் உள்ளிட்ட பட்டாசுகளை வெட்ட வெளியில் உள்ள குடிசைகளுக்கு அருகில் அல்லது கீற்றுக் கொட்டகைகளுக்கு அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
cckkalviseithikal
6. பட்டாசுகளை
வெடிக்காதீர்கள். கூட்டமான பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும்
7. பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
8. குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
9. நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைகளுக்கு அருகாமையிலோ அல்லது நோயாளர் பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றிற்கு அருகாமையிலோ பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
10. விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.மேலும் பறவைகள் அடைக்கலமாகும் பகுதிகளிலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதை தவிர்க்க ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.
11. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கவோ. கொளுத்தவோ செய்யாதீர்கள்.
12. அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
13. வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும்.
14. விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளைக் கொளுத்த அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும்.
15. இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
16. உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆகியோர் பட்டாசு வெடிக்கும்பொழுது வந்தால் அவர்கள் பாதுகாப்பாக கடந்து சென்ற பின்னர் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
17. பட்டாசுகளை மின் சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உருளை அருகில் வைத்து வீடுகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தொடக்கக் கல்வி இயக்குநர்

0 Comments