நாளை 25.10.25 சனிக்கிழமை ஈடு செய்யும் வேலை நாள். அரசாணை.
Click here
விடுமுறை தீபாவளி பண்டிகை 20.10.2025 திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 21.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
பொது (பல்வகை)த் துறை
அரசாணை (1டி) எண். 581
: 17.10.2025
விசுவாவசு வருடம், புரட்டாசி-31
திருவள்ளுவர் ஆண்டு-2055
படிக்க:-
1. 160/6001 (நிலை) : 03.09.2009. எண்.154. பொது(பல்வகை)த் துறை.
2. அரசுகடித எண்.8585/பல்வகை/2013-7, பொது (பல்வகை)த் துறை, நாள்: 21.02.2014.
3. பலதரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்.
:-
இவ்வாண்டு, 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 21.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.
2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 21.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை
(த.பி.பா.)
-2-
cckkalviseithikal
அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது. செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)- ου τότυπο, அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ரீட்டா ஹரிஷ் தக்கர்
அரசுச் செயலாளர்

0 Comments