1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள்.👇
Click here
FUTURE READY மாதாந்திர பயிற்சி மதிப்பீட்டுப் புலம்.
மாநில மதிப்பீட்டுப் புலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர FUTURE READY பயிற்சி வினாக்கள் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்குதல்
1 முதல் 5 ஆம் வகுப்பு களுக்கான FUTURE READY வினாத்தாள்களை ஆசிரியர்கள் EMIS login வழியாக CMS வலைதளம் மூலம் அணுகலாம்.
6 முதல் 9 ஆம் வகுப்புக்கான FUTURE READY வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக 👇
Click here
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
FUTURE READY வினாத்தாள்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ் வினாத்தாள்கள் அக்டோபர் 2025 முதல் மாதம் தோறும் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள Smart Board இல் EMIS Login வழியாக CMS Portal லிருந்து FUTURE READY கேள்விகளை காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இவ்வினாத்தாள்கள் எண்ணும் எழுத்தும் செயல்பாடாகப் பயன்படுத்த வேண்டும்.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாகவும் பயன்படுத்த வேண்டும்.

0 Comments