ஓய்வு பெற்ற / மரணமடைந்த CPS ஆசிரியர்களின் பணிப்பதிவேடு அனுப்ப வேண்டாம் - கருவூல இயக்குநரின் கடிதம்.

 ஓய்வு பெற்ற / மரணமடைந்த CPS ஆசிரியர்களின் பணிப்பதிவேடு அனுப்ப வேண்டாம் - கருவூல இயக்குநரின் கடிதம்.

Click here




பார்வையில் காணும் அரசாணையில் 01-04-2003-க்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட இறுதி ஆணை பெறுவதற்கு உரிய அலுவலகத்தில் இருந்து களஞ்சியம் (IFHRMS) இணையதளம் வாயிலாகவும் (Online), தபால் மூலமாகவும் முன்மொழிவுகள் (Offline) இவ்வலுவலகத்தில் பெறப்படுகிறது. பெறப்படும் முன் மொழிவுகள் அரசாணையின் படி பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் இறுதி ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்படுகிறது.


இவ்வலுவலகத்தில் பெறப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இறுதி முன்மொழிவுகள் மீது தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்படும்போது பெரும்பாலான இனங்களில் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு உரிய இணைப்புகள் இல்லாமல் பெறப்படுவதால் முன்மொழிவுகள் அசலாக திருப்பப்படுகிறது எனவே ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இறுதி ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.


மேலும் பணியில் இருந்து மரணம் அடைந்த பணியாளர்களுக்கு பெறப்படும் முன்மொழிவுகள் 60% அளவிற்கு உரிய இணைப்புகள் இல்லாமல் பெறப்படுவதால் பெரும்பாலான முன்மொழிவுகள் அசலாக திருப்பபடுகிறது. அதனால் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு இறுதி ஆணை வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. மேலும் இவ்வலுவலக வேலை பளுவையும் கூட்டுகிறது வாரிசு சான்றிதழில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து ஒருவருக்கு மட்டும் தொகை வழங்க வேண்டி இருந்தால் மற்ற வாரிசுகளிடமிருந்து ஆட்சேபனையின்மை சான்றிதழ் (NO OBJECTION CERTIFICATE) நோட்டரி பப்ளிக் (NOTARY PUBLIC) வாயிலாக முத்திரை தாளில் பெற்று அனுப்புமாறும், மைனர் குழந்தையாக இருந்தால் இயற்கை பாதுகாவலர் சான்றிதழை (GUARDIANSHIP CERITIFICATE) நோட்டரி பப்ளிக் (NOTARY PUBLIC) வாயிலாக முத்திரை தாளில் பெற்று அனுப்புமாறு தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

cckkalviseithikal

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நடத்தப்படும் மாவட்ட நிலை அலுவலர்களுக்கான கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் இறுதி முன்மொழிவுகள் தொடர்பாக ஆய்வு நிரலில் சேர்ப்பதுடன் கருவூல அலுவலர்கள் நேரடியாக களஞ்சியம் (IFHRMS) இணையதளம் வழியாக முன்மொழிவுகள் அனுப்பப்படும் அவசியம் குறித்து அறிவுறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


தபால் வழியாக அனுப்பும் பங்களிப்பு ஒய்வூதிய திட்ட முன்மொழிவுகளுடன் அசல் பணிப்பதிவேடு அனுப்ப வேண்டாம் எனவும், ANNEXURE-I மூன்று , បល់ (DATE OF BIRTH, DATE OF JOINING, DATE OF FROM REGULARISATION, DATE OF RETIREMENT/VRS/RESIGNATION/REMOVAL SERVICE/DATE OF DEATH) மற்றும் e-SR ஆகிய பக்கங்களை மட்டும் உள்ளடக்கிய நகல்களில் உரிய சான்றொப்பம் பெற்று இணைத்து அனுப்புமாறு தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.


மேலும் ஒப்பளிப்பு வழங்கப்பட்ட இறுதி ஆணைகள் உடனுக்குடன் பட்டியலிட்டு பயனாளர்களுக்கு பணப்பயன் வழங்கிடவும், தவறும் பட்சத்தில் காலதாமதத்திற்கு வட்டி கோரும் நேர்வுகளில், அதற்கு சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலகங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெறும் பயனாளர்களுக்கு முன்மொழிவுகளை காலதாமதம் இன்றி அனுப்பி வைக்குமாறும் பணம் பெற்று வழங்கும் அலுவலகங்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இப்பொருள் தொடர்பாக உடனடியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கூட்டம் நடத்தி பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இறுதி முன்மொழிவுகளை உரிய இணைப்புகளுடன் அனுப்பி வைக்க தக்க அறிவுரை வழங்குமாறு தெரிவித்து அதன் விவரத்தினை கூடுதல் இயக்குநர் (ஓய்வூதியங்கள்) பங்களிப்பு ஒய்வூதிய திட்ட பிரிவிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

cckkalviseithikal


கூடுதல் இயக்குநர்(ஓய்வூதியங்கள்

Post a Comment

0 Comments