ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுரை கோரி கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு நீலகிரி மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்.
Click here
அம்மையீர்.
பொருள்
சரண் விடுப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01-10-2025 ( 15 நாட்கள் ஒப்புவிப்பு செய்வது சில தெளிவுரைகள் கோருதல் தொடர்பாக
பார்வை
1 அரசாணை எண் 35 மனிதவள மேம்பாட்டுத் (FR.III) துறை நாள் 30-06-2025.
பார்வையில் காணும் அரசாணை எண் 35 மனிதவள மேம்பாட்டுத் (FR-III) துறை நாள் 30-08-2025-ன்படி சரண்விடுப்பு அனுமதிப்பது தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றிற்கான உரிய தெளிவுரைகள் பெற்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அ) அரசாணையின் பத்தி 4-ல் உள்ள உதாரணத்தில் 01-04-2020 அன்று ஒப்படைவு செய்தவர் 01.04.2026 அன்று மீண்டும் ஒப்படைவு செய்யலாம் எனவும் 15-10-2019 அன்று ஒப்படைவு செய்தவர் தற்போது 15-10-2025 அன்றே ஒப்படைவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறயின் 0110-2019-க்கு முன்பே சரண்விடுப்பு செய்தவர்களுக்கு தற்போது ஒப்படைவு நாள் எந்தத்தேதியில் அமையும்?
உதாரணம்: 01.09.2019 அன்று சரண் செய்தவர் தற்போது சரண் செய்யும் நாள் 01.10.2025 அன்று அமையுமா? அல்லது 01.09.2026 அன்று அமையுமா?
குறிப்பு: இயல்பான சரண் ஒப்படைவு சுழற்சி எனப் பொருள் கொண்டு 01-09-2019-க்கு
அடுத்த தகுதி நாள் 01-09-2026 எனக் கொண்டால் 01-09-2019-இற்கு பிறகு 01-04-2020 வரை சரண்
cckkalviseithikal
செய்தவர்கள் தனக்கு முன் சரண் செய்தவர்களுக்கும் முன்னரே தற்போது பலனடையக்கூடும் என்பதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
ஆ) 01:04-2018-ல் சரண்விடுப்பு செய்தவர் 01-04-2020 அன்று 30 நாட்கள் சரண்விடுப்பு செய்யத் தகுதியானவர். ஆனால் ஒப்புவிப்பு சலுகை இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் நிர்வாக காரணத்தால் 30 நாட்களை ஒப்புவிக்க இயலாமல் இருப்பின்
1 அன்னார் தற்போது சரண் விடுப்பு ஒப்படைவு செய்யும் நாட்கள் 30 நாள்களா? அல்லது 15 நாள்கள் மட்டுமா?
2 01-04-2018-இல் ஒப்படைவு செய்திருப்பதால் தற்போது சரண் விடுப்பு ஒப்படைவு செய்யும் தேதி
01-10.2025 (1) 01-04-20267
இ) 27-04-2020 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு 01-10-2025 முதல் விளக்கி கொள்ளப்பட்டு ஒப்படைவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக நிறுத்த காலம் தொடங்கும் முன்னரே அதாவது 27-04-2020-ற்கு முன்னரே ஈட்டிய விடுப்பு ஒப்படைவு செய்ய விண்ணப்பம் அளித்து, செயல்முறை ஆணை பிறப்பித்து / பட்டியல் கருவூலத்திற்கு அணுப்பி நிராகரிக்கப்பட்டவர்கள் விடையத்தில் அக்காலத்தில் திரண்டிருந்த ஈட்டிய
விடுப்பினை தற்போது சரண் செய்யலாமா?
ஈ) 27-04-2020 முதல் 30-09-2025 வரையிலான காலம் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பிற்கான தற்காலிக நிறுத்தக் காலம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், 01.04.2019 அன்று சரண் விடுப்பு செய்தவர்கள் 01-04-2026 அன்று 30 நாட்கள் சரண் விடுப்பு செய்யலாமா?
மேற்காணும் சந்தேகங்களுக்கான தெளிவுரைகள் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருவூல அலுவலர்
நீலகிரிமாவட்டம்
0 Comments