மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்றுகள் நட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண்.00086/எம்1/இ1/2025, நாள் ..08.2025
பொருள்
பார்வை
மற்றும்
Mission LIFE பள்ளிக் கல்வி - SDG-13 (Lifestyle for Environment) இயக்கத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 5.5.32844/1/1/2025, 02,06,2025
காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் இருந்து தொடங்கும் பொது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில். SDG-13 மற்றும் Mission LIFE (Lifestyle for Environment) இயக்கத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இது மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் நெறியில் பயணிக்க ஒரு சிறந்த வழியாக அமையும். ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் பசுமையைப் பேணும் ஒரு செயலில் நேரடியாக பங்கேற்கும் வகையில், கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுகின்றன:
முக்கிய நடவடிக்கைகள்:
ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை நட்டிட வேண்டும் (பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழலில்).
மரக்கன்றுடன் தாயார் அல்லது பாதுகாவலருடன் எடுத்த புகைப்படம் தயாரிக்க வேண்டும்.
அந்த புகைப்படம் Eco Clubs for Mission LIFE இணையதளத்தில் 10-09-2025க்குள் பதிவேற்றப்பட வேண்டும்
பள்ளி நிலை செயலாக்கம்:
ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை இயக்கக் குழு பொறுப்பாசிரியர், மாணவர் தூதர்கள். மற்றும் குழு மாணவர் தலைவர்கள் (House Captains) திட்டமிட்டு இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.
மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் (House System) அடிப்படையில் போட்டித் தன்மை உருவாக்கி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இது மாணவர்களின் ஆர்வமுள்ள பங்கேற்பை ஊக்குவிக்கும். மாவட்ட மற்றும் வட்ட அளவிலான ஒருங்கிணைப்பு:
தங்களது மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEOS) (இடைநிலை/தொடக்கப்பள்ளி/ தனியார் பள்ளி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEOS) உடன்
cckkalviseithikal
உடனடியாக கூட்டம் நடத்தி, இந்நிகழ்வின் நோக்கமும், அவசியமும் குறித்து விவாதிக்க வேண்டும்.
DEOS மற்றும் BEOS, தங்களது எல்லைகளுக்குள் உள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கூட்டம் நடத்தி, மரக்கன்று நடுதல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். Путка (One-Day Drive). ஒவ்வொரு வட்டத்திலும் 10-09-2025க்குள் ஏற்ற நாளில் செயல்படுத்தப்பட வேண்டும்.
மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேசிய பசுமை படை (NGC) ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு:
வனத்துறையுடன் இணைந்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளூர் தன்னார்வ அமைப்புகள் (NGOs) உடன் இணைந்து செயல்தி ஆதரவைப் பெற வேண்டும்.
மாணவர்கள் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர் ஒவ்வொருவருக்கும். பசுமை இயற்கைக்கு செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழில் மின் சான்றிதழ்கள் (e-certificates) உருவாக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும், தலைமையிலும் இந்த மரக்கன்று நடுதல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரமும். மாணவர்களின் உள்ளத்தில் ஒரு பசுமை எண்ணத்தை விதைக்கும். என்பதால் இப்பொருள் சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கலாகிறது.

0 Comments