தமிழ் இலக்கிய மன்றங்கள் வாயிலாக சமூக நீதிக் கருத்துக்களை மாணவர்களிடையே வலுப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 தமிழ் இலக்கிய மன்றங்கள் வாயிலாக சமூக நீதிக் கருத்துக்களை மாணவர்களிடையே வலுப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Click here




குழந்தைகளை விதைகளுக்கு ஒப்பிடுகிறோம். விதைகள் முளைப்பதற்கும் வளர்ந்து முழுமையான பலன் தருவதற்கும் உரிய சூழலை நாம் உருவாக்கித் தரவேண்டும். வகுப்பறையிலுள்ள திறன்களை வெளிக்கொணர்வதற்கும் அவற்றை வளமாக்கி முழுபலனை பெறச் செய்வதற்கும் ஏற்ற ஏதுவாளரே ஆசிரியர். பள்ளிகள்தோறும் இயங்கிவரும் மாணவர் மன்றங்களை குறிப்பாக தமிழ் இலக்கிய மன்றங்களை இதற்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கிய மன்றச் செயல்பாடுகளை நிகழ்த்துவதன் வாயிலாக, தன்மதிப்பு, தலைமைத் திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் தொடங்காற்றல், தனிநபர் ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு, குழு பண்புகள் மற்றும் இணைந்து செயலாற்றும் திறன், ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுத்தல், இணக்கத்தன்மை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், இனம், நிறம், மதம், பாலினம் சார்ந்த பாகுபாடுகளைக் களைதல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் குடிமைப் பண்புகள், மனித நேயம் மற்றும் நன்றி உணர்வு, ஊடக விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் மீதான அக்கறை, பெற்றோர் மற்றும் பெரியோர்களிடத்தில் மரியாதை, பிறர் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், நெகிழ்வுத்தன்மை மற்றும் படைப்பாற்றல், விவாதித்துப் புரிந்துகொள்ளும் திறன், திறனாய்வு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன், தனித்திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு திறன் ஆகிய பல்வேறு வாழ்வியல் மற்றும் விழுமியத் திறன்களை மாணவர்கள் பெறுவதோடு, சமூகநீதி மாணவர்களிடத்தும், பள்ளி வளாகங்களிலும் வலுப்பெற நல்ல வாய்ப்பாக அமையும்..

ஆகவே பள்ளிகளில் தமிழ் இலக்கிய மன்றங்களை முனைப்போடு செயல்படுத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

cckkalviseithikal

பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டுவன:-

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ் இலக்கிய மன்றம் சார்ந்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்பாடுகளைத் திட்டமிடல்.

பள்ளிச் செயல்பாடுகளில் அனைத்து தரப்பு மாணவர்களின் பங்கேற்பை உறுதிசெய்தல், மன்றச் செயல்பாடுகள் சார்ந்து மாணவர்களிடமே கலந்துரையாடி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பொறுப்பினை மாணவர்களிடமே ஒப்படைத்தல்.

பள்ளியிலும் வகுப்பறையிலும் எவ்வித வேறுபாடுமின்றி திறனுடைய மற்றும் சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் இணைந்து அனைவரும் செயல்படும்வகையில் குழுச்செயல்பாடுகளைத் திட்டமிடல்.

தமிழ்மொழியின் பண்பாட்டுச் சிறப்பை உணர்த்தும் வகையில் அன்பு, பொறுமை, போன்ற நற்பண்புகளின் அடிப்படையில் சகிப்புத்தன்மை, ஒற்றுமை மாணவர்களின் பேச்சு, நடிப்பு போன்ற செயல்பாடுகளை இறுதி செய்தல்.

சாதி, சமயம், பாலின வேறுபாடுகள் இன்றிச் செயல்படுவதற்கான விழிப்புணர்வு நாடகங்களை நிகழ்த்துதல்.

போதை விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு சார்ந்து நிகழ்த்துக் கலைகளை நடத்திட ஏற்பாடு செய்தல்.

தமிழ் இலக்கிய மன்றம் சமூக உணர்வுடனும், உயர்ந்த நெறிமுறைகளுடனும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு பயிற்சி மேடையாகும். இது, மாணவர்களைப் பெருமைமிக்க குடிமக்களாக உருவாக்குவதற்கு வித்திடும் நிகழ்வு ஆகும்.

மேலும், இதை உணர்ந்து தமிழ் இலக்கிய மன்றச் செயல்பாடுகளின் வாயிலாக, வகுப்பறையிலும் பள்ளியிலும் பேதங்களற்ற, வன்முறைகள் இல்லாத. சமத்துவ மாணவர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள்

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-இயக்குநர்

Post a Comment

0 Comments