குரூப் 2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
cckkalviseithikal
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண்: 129/2025
: 15.09.2025
செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 11/2025, நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 மு.ப. தேதியில் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) 6 www.tnpsc.gov.in w www.tnpscexams.in-60 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அசண்முக சுந்தரம், இ.ஆ.ப.
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
0 Comments