இன்று 17.09.2025காலை 11 மணியளவில் சமூக நீதி உறுதிமொழி ஏற்க உத்தரவு

 இன்று 17.09.2025காலை 11 மணியளவில் சமூக நீதி உறுதிமொழி ஏற்க உத்தரவு.



செப்டம்பர் 17


தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.


E.V.RAMASAMI 1879-1973

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆணையின்படி, அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி.

cckkalviseithikal


சமூக நீதி உறுதிமொழி

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!


சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!


சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!


மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!


சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!

Post a Comment

0 Comments