டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை.
டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குநரின் கடிதம்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
5.6.616.1243388/11/2025, . .08.2025
பொருள்:
தொடக்கக் கல்வி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை கூழு (டிட்டோஜாக்) ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் சார்ந்து விவாதித்தல் - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறல்-சார்பு.
பார்வை:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை கூழு (டிட்டோஜாக்) கோரிக்கைகள் மனு நாள். 11.07.2025.
.cckkalviseithikal
பார்வையில் கண்ட மனுவில் டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 16.07.2025, 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்து, தாங்கள் ஆசிரியர்கள் மீது அக்கறை கொண்டு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்ட நடவடிக்கைகளை தவிர்த்திட வழிவகை செய்திடுமாறு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முன்னிலையில் துறை அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தங்களின் கோரிக்கை பொருள் சார்ந்து விவாதிக்கப்படயிருக்கிறது.
எனவே, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் 14.08.2025 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளதால் அவ்வமயம் சங்க பொறுப்பாளர்கள் கோரிக்கைகள் சார்ந்து கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
0 Comments