தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (தனியார் அமைப்பு) சார்பாக நடத்தப்படும் போட்டிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் & மாணவர்கள் கலந்து கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
பொருள்
பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - அறிவியல் "விஞ்ஞானத்துளிர்" மாத இதழ் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் அறிவியல் மாநாடு - துளிர் வினாடி வினா மற்றும் தேசிய அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்பு
பார்வை
1. மாநில பொதுச் செயலர். தமிழ்நாடு அறிவியல் இயக்ககம். கோபாலபுரம் சென்னை-86 நாள்: 08.2025
பார்வையில் காணும் தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் மாநிலப் பொது செயலரின் கடிதத்தில், "தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1980 முதல் தமிழ்நாட்டில் அறிவியல் பரப்பும் பணியை செய்து வருகின்றோம் என்றும் குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ் "விஞ்ஞானத்துளிர்" பத்திரிகையையும் 1987 முதல் நடத்தி வருகின்றோம் என்றும் மற்றும் 2022-2023 கல்வியாண்டு முதல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை நடத்திவரும் வானவில் மன்றம் என்ற நடமாடும் அறிவியல் ஆய்வகம் நிகழ்வின் முதன்மை ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறின்றி "தமிழ்நாடு அறிவியல் இயக்கம்" செயல்பாடுகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளைச் சார்ந்தே நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் பின்வருமாறு.

0 Comments