அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து இயக்குநர்களின் கூட்டுச் செயல்முறைகள்

 அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து இயக்குநர்களின் கூட்டுச் செயல்முறைகள்

Click here


அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கூட்டுச் செயல்முறைகள்.




cckkalviseithikal

அகல் விளக்கு

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்


* "அகல் விளக்கு" தகவல் சிற்றேட்டில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கான காணொளிக் காட்சிகளை தயாரித்தல்.


மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பள்ளிகளில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும்.


மாநில வளக்குழுவானது (State Resource Group) மாவட்ட வளக்குழுக்கு (District Resource Group) பயிற்சி வழங்குதல் வேண்டும்.


+ மாவட்ட வளக்குழு வாயிலாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் வேண்டும்.


* பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள கால அட்டவணைப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் வாயிலாக உற்று நோக்குதல் வேண்டும்.


பள்ளிக் கல்வித் துறை


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கால அட்டவணைப்படி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.


cckkalviseithikal


தலைமையாசிரியர் அல்லது உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் வகுப்புகள் நடத்துதல் வேண்டும்.


பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பட்டியலை உதவித் திட்ட அலுவலர் மற்றும் CG ஒருங்கிணைப்பாளர் தயாரித்து மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அளித்தல் வேண்டும்.


வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்களும் இப்பயிற்சியில் பங்கு பெறுவதுடன், தங்களது குறுவளமையத்திற்குட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கால அட்டவணைப்படி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவதை பார்வையிட்டு உறுதி செய்தல் வேண்டும்.

Post a Comment

0 Comments