கண்டிப்புடன் படிக்க வைத்த ஆசிரியர் மீது போக்சோ.

 கண்டிப்புடன் படிக்க வைத்த ஆசிரியர் மீது போக்சோ.


cckkalviseithikal

சம்பந்தப்பட்ட தமிழ் ஆசிரியர், மாணவ, மாணவியரை கண்டிப்புடன் படிக்க வைத்து வந்தார். சில மாணவ, மாணவியருக்கு அது பிடிக்கவில்லை.



ஒசூர், அரசு மாணவியிடம் பள்ளியில் ஆபாசமாக பேசியதாக, தமிழ் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல் நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரு பவர் கிருஷ்ணகுமார், 50. இவர், ஆபாசமாக பேசியதாக கூறி, 10ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று முன்தினம் சக மாணவ, மாணவியரிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.


அதனால் மாணவ, மாண வியர் அவரை தடுத்து நிறுத் தினர். தகவலறிந்த ஒசூர் அனைத்து மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியர் கிருஷ்ணகுமாரை விசார ணைக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.


மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை அதனால், மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு துறையினர் விசாரித்தனர். துறையின் அதிகாரி ரகுராமன், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார்.


அதில், மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக குறிப் பிட்டுள்ளார். அதன்படி, போக்சோ சட்டத்தில், ஆசி கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிந்து, தன்மை ரியர் புகாரின் குறித்து, போலீசார் விசாரித்து வருகின் றனர்.


இது குறித்து, பள்ளி குழு உறுப் மேலாண்மை பினர் ஒருவர் கூறியதாவது: 'சம்பந்தப்பட்ட தமிழ் ஆசிரியர், மாணவ, மாணவியரை கண்டிப்புடன் படிக்க வைத்து வந்தார். சில மாணவ, மாண வியருக்கு அது பிடிக்க வில்லை. கடந்த சில மாதங்க ளுக்கு முன், வேறு பள்ளிக்கு இடமாறுதல் பெற ஆசிரியர் விரும்பினார்.


நாங்கள் தான், இங்கேயே பணியாற்ற கேட்டோம். அதன்படி அவர் இங்கு பணி யாற்றினார். அவரை இட மாற்றம் வேண்டும் என்ற கோணத்தில் செய்ய வைக்க தான், இதுபோன்ற பொய் புகாரை, அவர் மீது கூறியுள் ளனர். அவர் நன்றாக பணி யாற்றக்கூடிய ஆசிரியர். அவர் தவறு செய்யவில்லை.

Post a Comment

0 Comments