கலைத்திருவிழா 2025 குறுவளமைய அளவிலான போட்டிகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்.
Click here
கலைத்திருவிழா 2025
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுவளமைய அளவிலான போட்டிகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்.
பார்வை-1ல் காணும் இணைச் செயல்முறைகளின்படி, 2025-2026 ஆம் ஆண்டில், 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான குறுவள அளவிலான போட்டிகள் 25-08-2025 முதல் 29-08-2025 வரை திட்டமிட்டு நடத்திட அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, பள்ளியளவில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர் மட்டுமே அடுத்த நிலை போட்டியான குறுவள அளவிலான போட்டியில் பங்குபெறுதல் வேண்டும். (அதாவது ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே அடுத்த நிலை போட்டியான குறுவள அளவிலான போட்டியில் பங்குபெற வேண்டும்).
cckkalviseithikal
குறுவள அளவில் நடைபெறும் போட்டிகளுக்கான விதிமுறைகள்
வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு குறுவளமையங்களில் எங்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்ற தகவல் முன்கூட்டியே சார்ந்த குறுவள பள்ளிகளுக்கு சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் மூலம் தெரிவிக்கப்படுதல் வேண்டும். இக்குறுவள அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும்.
குறுவள அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச்சென்று மீண்டும் கொண்டுவந்து சேர்த்தல் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று குறுவள அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் (Consent Letter from Parent) கட்டாயமாக பெறப்படுதல் வேண்டும். அவ்வாறாக பெறப்படும் ஒப்புதல் கடிதங்களை முறையாக பராமரித்தல், சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்பாகும். குறுவள் அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும்போது உடன் ஆண் ஆசிரியர் ஒருவர். பெண் ஆசிரியை ஒருவர் செல்லுதல் வேண்டும்.
0 Comments