1-9 வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் தயாரித்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
அன்புடையீர்,
பொருள்:
பள்ளிக்கல்வி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர 'Future-ready' பயிற்சி வினாக்கள் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
பார்வை:
1. -06, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டம் நாள். 11.07.2025
2. இந்நிறுவன இதே எண்ணிட்ட செயல்முறைக் கடிதம் : 04.08.2025
பார்வை 1-ல் காணும், மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களின் கூட்டக் குறிப்பில், மாணவர்களிடம் அடைவுத் தேர்வினை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையினை மேம்படுத்தவும், உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் பயின்ற பாடப்பொருளை ஒட்டிய 'Future-ready' உயர்சிந்தனை வினாக்களை தயாரிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் வாசித்தல் பத்திகள் மற்றும் அவற்றை சார்ந்த வினாக்கள் மற்றும் இலக்கணப் பயன்பாட்டு வினாக்கள் (Reading Comprehension and application of grammar) கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் புரிதல், பயன்படுத்துதல் போன்ற உயர் சிந்தனைத் திறன்களை மேம்படுத்தும் வினாக்கள் ஆகியன ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படவுள்ளன.
மேற்கண்ட மதிப்பீட்டை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments