மாணவர்களுக்கு திறன் (THIRAN) பயிற்சி வழங்குதல் குறித்து இணை இயக்குநரின் அறிவிப்பு.
*அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு*
*மதிப்பிற்குரிய இணை இயக்குநர் அவர்களது அறிவுரைகளின்படி*
*28.07.2025 திங்கள்கிழமை முதல் அனைத்துப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் செயல்பாட்டில்* இருத்தல் வேண்டும். *திறன் மாணவர்கள் தனியாகப் பிரித்து அமரவைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும்.*
முன்னரே மாநிலத்திலிருந்து பெறப்பட்ட *Thiran Joint Proceedings* அனைத்துப் பள்ளிகளிலும் *print out* எடுத்து வைத்திருத்தல் வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளின்படி *தமிழ் ஆங்கில கணித வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் 90 நிமிடங்கள் வீதம் தினசரி 30 நாட்களுக்கு திறன் மாணவர்களைப் பிரித்துவைத்து தனிவகுப்பில் நடத்துதல் வேண்டும்.*
📝 *tnexam websiteல் தற்போது 6,7,8,9 வகுப்புகளுக்கான தமிழ் ஆங்கில கணித ஆசிரியர் கையேடுகள் தரவிறக்கம் செய்யத் தயார் நிலையில் உள்ளன.*
🌺 *6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளில் திறன் TAGGING ( yes/ no) ற்கு உட்படுத்தப்பட்டு baseline assessment முடித்த பின்னர் அம் மாணவ மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதத்திற்கான மதிப்பெண்களை EMIS ல் உள்ளீடு செய்த பிறகு 80 சதவீதத்திற்கு மேல் வரும் மாணவ மாணவிகள் திறன் இயக்கத்தினுள் வரவழைக்கப்பட மாட்டார்கள். 6 முதல் 9 வரை என்பது 80 சதவீதத்திற்கும் கீழ் உள்ள மாணவ மாணவிகள் திறன் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.( ஆகஸ்ட் மாதம் வரை BASIC L.O - திறன் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஒரு மாத காலம் பயிற்சி - தினமும்- தமிழ் 90 நிமிடம் ஆங்கிலம் 90 நிமிடம் கணிதம் 90 நிமிடம். இதற்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர் ஒதுக்கீடு தலைமையாசிரியர் தலைமையில் தயார் செய்திருக்க வேண்டும்*
📝 *திறன் வகுப்புகளுக்கான பாட அட்டவணை பள்ளியில் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.*
📝 *நடுநிலை மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளின் அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் திறன் குறித்து அறிந்திருத்தல் வேண்டும்.*
🌺 *வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட அல்லது exams site மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட THIRAN Teacher hand book ( THB) - soft copy இன்று 30 நாள் திறன் பயிற்சி எடுக்கக்கூடிய தமிழ் ஆங்கிலம் கணித ஆசிரியர்களுக்கு குறைந்தது 5 பக்கங்களை print out எடுத்து தரப்பட வேண்டும். இன்று முதல் THB ல் உள்ள BASIC L.O ற்கான பாடப்பொருளின் படி வகுப்பறை செயல்பாடு இருக்க வேண்டும்*
🌺 *"THIRAN STUDENT - WORK BOOK - soft copy ம் whatsapp குழுவில் பகிரப்பட்டுள்ளது. ஒரு பாடத் தலைப்பு முடிந்த பின்னர் அதற்கான பயிற்சித்தாள் செய்வதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.WORK BOOK hard copy கிடைக்கும் வரை ஆசிரியர் கரும்பலகையில் ( or Smart TV or Smart class)எழுதி மாணவர்களை நோட்டில் எழுத வைக்கலாம்.*
🌺 *வார வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்த வாரத்தில் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு ( தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும்) paper test வைக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.( mark entry , corrected papers)*
📝 *29.07.25 செவ்வாய் முதல் மதிப்பிற்குரிய ASPD அம்மா அவர்கள் COIMBATORE மாவட்டத்தின் எந்தப் பள்ளியினையும் பார்வையிடுவார் என்பதால், திறன் சார்ந்த செயல்பாடுகள் சரிவர இருப்பதை அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் உறுதிசெய்துகொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.*
🌺 *7 நாட்களுக்குள் ஆசிரியர் கையேடு ( THB) மற்றும் மாணவர் பயிற்சி ஏடு ( WB) இரண்டும் பள்ளிகளுக்கு கிடைக்க பெற்றுவிடும்*
🌺 *குறிப்பு - emis school login ல் கீழ்க்கண்டவாறு THIRAN 30 நாள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய மாணவ மாணவிகளின் விவரங்களை CLASS WISE,SECTION WISE - print out எடுத்து வைத்துக்கொள்ளலாம்*
*Emis School login*
*Thiran assessment*
*Exam mark entry*
*Filter by assessment name- select ALL*
*filter by status- unselect all*
*Click on - view &update ( in any 1 class) Right corner download option available*
*நன்றி*
0 Comments