SMC கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
நாளை (25.07.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பார்வை-1 இன்படி பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 25.07.2025. வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழு செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் செயல்முறைகளில் உள்ள கூட்டப் பொருளில் கீழ்க்கண்டவாறு சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை
1. மணற்கேணி செயலி தூதுவர்கள் அறிமுகம்:
cckkalviseithikal
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக உருவாக்கிய மணற்கேணி என்ற டிஜிட்டல் கல்வி தளம், 2023 ஜூலை 25 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் தொடங்கப்பட்டது.
மணற்கேணி பாரம்பரிய கல்வி மற்றும் நவீன தொழில் நுட்பத்திற்கிடையிலான இடைவெளியை நிரப்பும் முன்னோடியான தொழில் நுட்ப தளம் ஆகும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்தரமான டிஜிட்டல் உள்ளடக்கங்களை வழங்குவதன் வாயிலாகா, இந்த செயலி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவுகிறது.
Play Store-இல் மணற்கேணி செயலி 10 இலட்சத்துக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
cckkalviseithikal
பார்வை-2-இல் காணும் செயல்முறைகளின்படி மணற்கேணி செயலியினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மணற்கேணி தூதுவர்கள் (Ambassadors) மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மணற்கேணி செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்காண் செயல்பாடுகள் சார்ந்து இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மணற்கேணி தூதுவர்கள் 25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள செய்து அவர்களை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தவும். இந்த மணற்கேணி தூதுவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட உரிய ஆதரவை வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments