SMC உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவிப்பு.
Click here
பார்வை (1) - இன்படி அரசு தொடக்க, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது 2024 ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பார்வை -2 இன்படி, பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஆற்றல் படுத்துவது சார்ந்து முதற்கட்டமாக 3812 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்குவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
3812 பள்ளிகளில் இரண்டு விதமான பயிற்சி உத்திகள் கையாளும் வகையில் 1934 பள்ளிகள் ஒரு குழுவாகவும் (Part A) மீதமுள்ள 1878 பள்ளிகள் மற்றொரு குழுவாகவும் (Part B) வகைப்படுத்தப்பட்டு தொடர்பயிற்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படவும், பெற்றோர் செயலி வழியாக பள்ளியின் முக்கியத் தேவைகளை அறிந்து தீர்மானங்களை உள்ளீடு செய்து தேவைகள் பெற எதுவாக உறுப்பினர்களுக்குப் பயிற்சி அவசியமாகிறது.
இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ள குழு B-யினை சேர்ந்த 1878 அரசு தொடக்க/
நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு
cckkalviseithikal
உறுப்பினர்களுக்கு பள்ளி அளவிலான நேரடிப் பயிற்சிகள் பள்ளி மேலாண்மைக் குழுக் கருத்தாளர்களைக் கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய வழிகாட்டுதல்கள்:
1. பள்ளியளவிலான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கானப் பயிற்சியானது 2025 ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இணைப்பு-2-இல் உள்ள கால அட்டவனையின் படி நடத்தப்பட வேண்டும்.
2. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான இப்பயிற்சியானது பள்ளியளவில் பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட வேண்டும்.
3. பயிற்சியானது 3 மணிநேரம் கால அளவைக் கொண்டதாக திட்டமிட்டு காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்பட வேண்டும். சூழலுக்கு ஏற்ப பயிற்சி துவங்கும் நேரத்தை பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரை செய்யலாம்.
4. பயிற்சியின் பங்கேற்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தேச செலவினங்கள் அடிப்படையில் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கிட வேண்டும்.
5. அனைத்து உறுப்பினர்களும் உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துகொள்வதை பள்ளித் தலைமையாசிரியர் வழியாக கருத்தாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
6. பள்ளியில் திறன்மிகு வகுப்பறை (SMART CLASS ROOM or SCREEN) இருப்பின் அந்த வகுப்பறையில் பயிற்சியினை நடத்த அறிவுறுத்தப்பட வேண்டும்..
7. பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான காணொளிகளைத் திரையிட ஏதுவாக புரஜெக்டர் உள்ளிட்ட ஒளி ஒலி அமைப்புகள் சரியாக உள்ளதா என்பதை பயிற்சிக்கு முன்னதாகவே சரிபார்த்து தயார்நிலையில் இருப்பதை தலைமையாசிரியர் உறுதிசெய்ய வேண்டும்.
8. இப்பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களின் வருகையை முறையாக பதிவுசெய்து குழுப் புகைப்படத்துடன் பெற்றோர் செயலியில் தலைமையாசிரியர் பதிவிடவேண்டும்.
9. பயிற்சி நடைபெறும் பள்ளியில் எந்த வகுப்பறையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை பங்கேற்பாளர்களுக்கு தலைமையாசிரியர் வழியாக முன்கூட்டியே தெரிவித்து உறுதிபடுத்த வேண்டும்.
10. பயிற்சி நடைபெறும் அறை காற்றோட்டமுள்ள குடிநீர் வசதியுள்ள அறையாக இருக்க வேண்டும்.
0 Comments