SLAS - 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கி இயக்குநர்களின் செயல்முறைகள் வெளியீடு

SLAS - 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கி இயக்குநர்களின் செயல்முறைகள் வெளியீடு.

Click here






அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட, கற்றல் இடைவெளியை கண்டறிய 2025 பிப்ரவரி 4, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மாநில அடைவு ஆய்வு (State Level Achievement Survey - SLAS 2025) நடத்தப்பட்டது.


தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் வழிகாட்டுதலுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்து வழங்கிய வினாத்தாள்களைக் கொண்டு அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 38,670 மாணவர்களை உட்படுத்தி இவ்வாய்வு நடத்தப்பட்டது.


இவ்வாறு நடத்தப்பட்ட மாநில அடைவு ஆய்வின் முடிவுகள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரவலாக்கப்பட்டு உள்ளது. ஆய்வு அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்களின் உள்நுழைவின் (Login id) வழியாக மாநில அடைவு ஆய்வின் முடிவுகளை கண்டறிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும்



cckkalviseithikal

தங்கள் நிர்வாக எல்லைக்குள் அமைந்த பள்ளிகளின் தரநிலை ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் ஒப்பீடு செய்யப்பட்ட விவரங்களுடன் எளிதில் இனம் காணும் வகையில் ஆய்வுகளின் முடிவுகள் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளன.


மாநில அடைவு ஆய்வு முடிவுகள் தொடர்பாக பின்வரும் அறிவுரைகளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மூலம் வழங்கிடவும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிடவும் முறையே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments