Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - JD (NSS) செயல்முறைகள்

 Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - JD (NSS) செயல்முறைகள்.

Click here



பார்வை 2ல் காணும் செயல்முறைகளின் படி 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ள்ள தொடக்க,நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் 20.07.2025 முதல் 03.082025-க்குள் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பத்தில் எதேனும் தவறுதலாக உள்ளீடு செய்து சமர்ப்பித்து விட்டால் அதனை சரி செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ளும் வாய்ப்பு 29.07.2025 முதல் இணையவழி விண்ணப்பத்தில் இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை சரியாக உள்ளீடு செய்வதை உறுதி செய்து மேற்குறிப்பிட்டுள்ள நாளுக்குள் (03.08.2025) முழுமையாக பதிவேற்றம் செய்ய தெரிவிக்குமாறும், வழங்கப்பட்டுள்ளது. எனவே

2

cckkalviseithikal

மேலும் 03.08.2025 க்குப் பின்னர் இணையவழி விண்ணப்பங்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் அதன் பின்னர் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது என்ற விவரத்தினை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/ ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி தெரிவிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments